9-3-22/12.00pm
உத்திரபிரதேசம் : எழுகட்டங்களாக நடைபெற்று முடிந்த உத்திரபிரதேச சட்டமன்ற தேர்தலின் முடிவுகள் நாளை வெளியாகவுள்ள நிலையில் எதிர்க்கட்சி தலைவர்கள் மற்றும் அதன் தொண்டர்கள் பைனாகுலர் கேமரா சகிதமாக சுற்றித்திரிகின்றனர்.

உத்திரபிரதேச சட்டமன்ற தேர்தல் முடிவுகள் பிஜேபிக்கு சாதகமாக வெளிவந்திருக்கும் நிலையில் கொந்தளிப்பின் எல்லைக்கே சென்றுள்ள முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் ஒரு புரளியை கிளப்பியுள்ளார். அதில் வாரணாசியில் EVM மெஷின் கடத்தப்பட்டதாக வீடியோக்கள் தனக்கு வந்திருப்பதாகவும் அதனால் அனைவரும் கேமரா பைனாகுலர் சகிதமாக உச்சகட்ட உஷார் நிலையில் இருக்கவேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.

ஆனால் வாரணாசி பகுதியில் கொண்டு செல்லப்பட்ட EVM மெஷின் பயிற்சிக்காக தேர்தல் ஆணையத்தால் கொண்டுசெல்லப்பட்டது என ஆணையம் விளக்கமளித்திருந்தது.

மேலும் அந்த புகைப்படங்களையும் பகிர்ந்திருந்தது. அது தெரிந்தும் அகிலேஷ் இதுபோல ஒரு புரளியை கிளப்பியுள்ளது அனைவரையும் அகிலேசுக்கு எதிராக திருப்பியுள்ளது.

மேலும் அகிலேஷ் ஆதரவாளர்கள் பைனாகுலர் மற்றும் கேமராக்களுடன் வாக்கு எண்ணும் மையங்களை சுற்றி வலம்வருகின்றனர். இதனால் கேமரா மற்றும் பைனாகுலருக்கு தட்டுப்பாடு நிலவுவதாக கூறப்படுகிறது. முதல்வர் யோகி ஆதித்யநாத் செய்தியாளர் கேள்விக்கு ” குறுக்குவழியில் செல்வதால் நாம் சாதனையாளர் ஆகிவிட முடியாது.
ஆனால் நாம் கடினமான பாதையை தேர்ந்தடுத்து போராடினால் மட்டுமே வெற்றியாளர் ஆக முடியும்” என குறிப்பிட்டார்.
…..உங்கள் பீமா
