9-3-22/13-13pm
கோவா : கோவாவில் உள்ள 40 சட்டமன்ற தொகுதிகளுக்கும் கடந்த பிப்ரவரி 14ம் தேதி தேர்தல் நடத்தப்பட்டது. இதன் முடிவுகள் நாளை அறிவிக்கப்பட இருக்கிறது. இதையொட்டி காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மீ கட்சிகள் தங்களது வேட்பாளர்களை மறைமுக இடத்தில் அடைத்து வைத்துள்ளன.
கடந்த 2017 சட்டமன்ற தேர்தலில் நடந்த தவறுகள் இந்தமுறை நடந்துவிடக்கூடாது என காங்கிரஸ் உறுதியாக இருப்பதாக ப.சிதம்பரம் பேட்டியளித்துள்ளார். கடந்த 2017ல் காங்கிரஸ் 17 இடங்களில் வெற்றிபெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்திருந்தது. பிஜேபி 13 இடங்களில் வெற்றிபெற்றிருந்தது. ஆனால் கூட்டணிக்கட்சிகள் ஆதரவுடன் ஆட்சியமைக்க போதுமான 21 இடங்களை பிடித்து பிஜேபி ஆட்சியமைத்தது. மறைந்த மாண்புமிகு மனோகர் பாரிக்கர் அவர்கள் பாதுகாப்புத்துறை அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு கோவா முதல்வரானார்.

இந்தமுறை கோவாவில் தொங்கு பாராளுமன்றம் அமைய வாய்ப்பிருப்பதாக கருத்துக்கணிப்புகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. மமதாவின் திரிணாமூல் காங்கிரஸ் மூன்று இடங்களை கைப்பற்றும் என தகவல்கள் வெளியாகியுள்ளநிலையில் மமதா அடுத்த முதல்வரை தேர்ந்தெடுக்கும் கிங் மேக்கராகலாம் என செய்திகள் உலாவருகின்றன. இந்நிலையில் காங்கிரஸ் தனது வேட்பாளர்களை வடக்கு கோவாவில் உள்ள ரிசார்ட்டில் அடைத்து வைத்திருப்பதாக உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுபோல ஆம் ஆத்மீ நிறுவனர் அரவிந்த் கெஜ்ரிவால் தேர்தலையொட்டி வேட்பாளர்களிடம் சத்தியம் வாங்கியது நினைவிருக்கலாம். தற்போது அவரும் தனது வேட்பாளர்களை இன்றுஇடம் மாற்றலாம் என செய்திகள் வெளியாகியுள்ளன. காங்கிரஸ் வேட்பாளர் சிலர் தங்களை மிரட்டி அடைத்துவைத்திருப்பதாக பேசிய வாட்சப் கால் ஒன்று கோவாவில் பரபரப்பை கிளப்பியுள்ளது.

மேலும் ப.சிதம்பரம் இதுகுறித்து கூறுகையில் ” எங்கள் வேட்பாளர்களை யாரும் திருட அனுமதிக்கமாட்டோம். கடந்த சட்டமன்ற தேர்தலில் நடந்த தவறை இந்தமுறை சரி செய்ய முயற்ச்சி செய்துகொண்டிருக்கிறோம்” என கூறியுள்ளார். மேலும் பஞ்சாப் வேட்பாளர்கள்பலர் தற்போது தலைமறைவாக உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. அதே போல அங்கு லட்டு ஆர்டர்கள் குவிந்துகொண்டிருப்பதாக இனிப்புக்கடை உரிமையாளர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்து வருகின்றனர்.
….உங்கள் பீமா
