7-3-22/17.05pm
திருப்பூர் : திருப்பூர் மாவட்டம் அவினாசி அருகே இரவுநேரத்தில் பறக்கும் மர்ம ட்ரோன்களால் கிராம மக்கள் பீதியில் உறைந்துள்ளனர். மேலும் இதுகுறித்து இன்று திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டிருக்கிறது.
அவிநாசி அருகே அமைந்துள்ளது புலிப்பார் தத்தனூர் ஊராட்சிகள். இங்கு 10000 குடும்பத்திற்கு மேல் இந்த ஊராட்சி பகுதிகளில் வசித்து வருகின்றனர். இங்கு சில நாட்களாக இரவு 7 மணிமுதல் 11 மணி வரை மர்மமான முறையில் ட்ரோன்கள் பறப்பதாக தெரிகிறது.

இதையடுத்து கிராம பெண்கள் அச்சமடைந்துள்ளனர். பெண்கள் இரவுநேரத்தில் இயற்கை உபாதைக்காக ஒதுங்குவது வழக்கம். இவர்களை குறிவைக்கிறார்களா என மக்கள் சந்தேகமெழுப்புகின்றனர்.

இதுகுறித்து பேசிய கொஞ்சிதாமரைக்குளம் ஊராட்சியை சேர்ந்த பாக்கியலட்சுமி என்பவர் ” அவிநாசி பக்கம் இருக்கின்ற நான்கு ஊராட்சிகளில் பல கிராமங்கள் இருக்கிறது.

இதில் இருபதாயிரத்திற்கு மேற்பட்டோர் வசித்துவருகிறோம். இரவு நேரங்களில் மர்மமான முறையில் ட்ரோன்கள் பறக்கிறது. மேற்கூரையில்லாத கழிவறைகள் எங்கள் கிராமத்தில் இருக்கிறது. மேலும் பல பெண்கள் இயற்கை உபாதைக்காக வெளியில் செல்கிறார்கள்.
பெண்களை மட்டும் குறிவைத்து படம் எடுப்பதாக உணர்கிறோம். அதனால் மகளிர் சார்பாக நங்கள் திருப்பூர் மாவட்ட கலெக்டரிடம் இதுகுறித்த விசாரணை நடத்த கோரி மனு அளித்துள்ளோம்” என கூறினார்.
சமூக விரோதிகள் யாரும் இந்த செயலை செய்கிறார்களா என கண்டறிந்து போலீசார் தக்கநடவடிக்கை எடுக்கவேண்டும் என அவிநாசி மக்கள் கோரிக்கையெழுப்பி வருகின்றனர்.
……உங்கள் பீமா
