4-3-22/16.50pm
சென்னை : உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் அதிகரித்து வரும் வேளையில் இந்தியாவின் வேண்டுகோளிற்கு இணங்க ரஷ்யா நேற்று ஆறுமணிநேரம் போரை நிறுத்தி இந்தியர்களை காப்பாற்ற வழிவகை செய்து கொடுத்தது. மேலும் ரஷ்ய வான்வெளியில் இந்திய விமானம் தவிர வேறு நாட்டு விமானங்கள் பறந்தால் சுட்டு வீழ்த்தப்படும் எனவும் அறிவித்திருந்தது.
விண்வெளியில் உள்ள ரஷ்ய கப்பலில் இருந்து இந்தியா தவிர அனைத்து நாடுகளின் கொடியையும் நீக்கிய ரஷ்யா தனது இந்தியாவுடனான நட்பை உலகுக்கு பறைசாற்றியது. ஆபரேஷன் கங்கா எனும்மபெயரிட்டு குழுவை அமைத்த மோடி அரசு மாணவர்களை மீட்க நேரடியாக மத்திய அமைச்சர்களை களமிறக்கியது. இதனிடையே இந்தியாவின் முதன்மை முதல்வர் தமிழர்களை மீட்க தனி குழு ஒன்றை அமைத்து மத்திய அரசின் ஒப்புதல் கேட்டு கடிதம் எழுதியுள்ளார்.
இந்நிலையில் இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த தமிழக பிஜேபி தலைவர் அண்ணாமலை ” ஆயிரக்கணக்கான மக்களை மீட்டிருக்கிறோம். அனைவரும் தங்கள் நன்றிகளை கூறிவருகின்றனர். இந்தியாவின் போர்விமானமான சி 17 மீட்பு பணியில் ஈடுபட்டிருக்கிறது. உலகில் எந்த ஒரு தலைவராவது போர் நடத்தும் இரு நாடுகளுக்கும் பேசி போரை ஆறுமணிநேரம் நிறுத்த வைக்க முடியுமா. மத்திய அரசு அதை செய்து காட்டியிருக்கிறது.
நாளை பிலிப்பைன்ஸில் ஒரு புயல் வந்தால் தமிழர்களை காப்பாற்ற தனி குழு அமைப்பாரா முதல்வர். இல்லை ஜப்பானிலோ அல்லது வேறுநாட்டிலோ நடந்தால் தனி குழு அமைக்க முடியுமா. இதெல்லாம் ஊடகங்களுக்கு காட்டக்கூடிய விளம்பர வித்தை. இந்திய வெளியுறவுத்துறை அதிகாரிகள் எல்லாம் தனித்திறன் வாய்ந்தவர்கள். முதல்வருக்கு உலக அரசியல் என்னவென்று தெரியுமா. இதெல்லாம் சுய விளம்பரம்.
இதெல்லாம் நுணுக்கமாக செய்யவேண்டிய ஒரு பணி. வருகிற பேருந்துகளில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டு நாங்கள்தான் செய்தோம் நாங்கள் தான் காப்பாற்றினோம் என சொல்வதல்ல. வசனம் பேசுவது முக்கியமல்ல.
உள்ளூரில் இருக்க கூடிய அந்த மாணவர்களின் குடும்பத்தினர் எத்தனை பேரை திமுக எம்.எல்.ஏக்கள் எம்பிக்கள் மாவட்ட ஆட்சியர்கள் சந்தித்தார்கள்” என முதல்வர் பற்றிய கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.
…..உங்கள் பீமா
