24-1-22/15.40pm
கடந்த 2021 ஆண்டு முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு 100 மில்லியனை தாண்டி இறக்குமதி வர்த்தகம் நடந்துள்ளது.

முக்கியமாக எலெக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர் மற்றும் மொபைல் சாதனங்கள், விளையாட்டு பொருட்கள், கைவினை பொருள்கள், ஆடம்பர மற்றும் இதர ஜவுளிகள், வீட்டு உபயோக பொருட்கள், மர சாதனங்கள், காகித உற்பத்தி பொருட்கள், உற்பத்திக்கு தேவையான கெமிக்கல்ஸ், ஆட்டோ மொபைல் உதிரி பாகங்கள் என பல வகையான இறக்குமதி நடந்துள்ளது.

பல பொருட்கள் முழுமை தன்மையுடன் (finished goods) மற்றும் உற்பத்திக்கு தேவையான ரா மெட்டிரியலாகவும் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.

இதற்கு முக்கிய காரணமாக இந்தியாவில் உள் கட்டமைப்பு வசதிகள் போதிய அளவு இல்லை என்பதாலும், குறைந்த அளவு உற்பத்தி நடைபெறுவதாலும், உள் நாட்டை விட குறைந்த விலையில் கிடைப்பதாலும், கோவிட் காரணமாக உற்பத்தி பெருமளவில் குறைந்ததால் இது அதிகரித்துள்ளது.

மத்திய அரசு மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் பல நல்ல முன்னெடுப்புகளை செய்து உள் நாட்டு உற்பத்தியில் தன்னிறைவு அடைய இடையூறுகளை கடந்து வருகிறது. ஆயினும் இது போதிய அளவில் முன்னேற்றம் தரவில்லை என்பது வருத்தம் அளிக்கிறது. குறிப்பாக மோபைல் மற்றும் ஆட்டோ மோபைல் உதிரி பாகங்கள் தயாரிப்புகளில் இந்திய அரசாங்கம் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.

அதேபோல குழந்தைகள் விளையாட்டு பொருட்கள் தயாரிக்கும் நிறுவனங்களை ஊக்குவிக்கும் வகையில் மத்திய அரசு பல வகையான சலுகைகளை அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் உலக அளவில் இந்திய ஏற்றுமதியில் நல்ல முன்னேற்றம் அடைய வாய்ப்புள்ளது.

வங்கிகள் தாராளமாக கடன் உதவி வழங்குவதோடு மத்திய மாநில அரசுகள் இணைந்து செயல்பட்டு தங்கள் மாநிலத்தில் உட் கட்டமைப்புகளை முன்னேற்றும் பொருட்டு பல சாதனைகளை நிகழ்த்தலாம்.
…..நங்கநல்லூர் சௌந்தர்ராஜன்
