Monday, December 2, 2024
Home > செய்திகள் > கோயம்புத்தூரில் பரபரப்பு..! பாஜக பிரமுகர் கைது..!

கோயம்புத்தூரில் பரபரப்பு..! பாஜக பிரமுகர் கைது..!

24-1-22/14.45pm

கோயம்புத்தூர் : தமிழகத்தில் சமீபநாட்களாக பாஜக பிரமுகர்கள் மற்றும் தொண்டர்கள் கைதுசெய்யப்பட்டு வருவது வாடிக்கையாகிவருகிறது. இந்நிலையில் கோயம்புத்தூர் பகுதியை சேர்ந்த பாஜக பிரமுகர் ஒருவர் கைதுசெய்யப்பட்டிருப்பது பரபரப்பை உண்டுபண்ணியுள்ளது.

கோயம்புத்தூர் மாவட்டம் ஆலந்துறை அருகே அமைந்துள்ளது பூலுவப்பட்டி பேரூராட்சி அலுவலகம். பாஜக அமைப்புசாரா தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் பாஸ்கரன் தலைமையில் சில பாஜக பிரமுகர்க; பேரூராட்சி அலுவலகத்திற்கு சென்றதாக தெரிகிறது. அங்கே கருணாநிதி புகைப்படத்திற்கு அருகே பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படத்தையும் சுவற்றில் மாட்டியுள்ளனர்.

இதற்க்கு அங்குள்ள ஊழியர்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். முக கவசம் அணியாமல் வந்ததாகவும் அத்துமீறி அனுமதியின்றி நுழைந்து புகைப்படத்தை மாட்டியதாகவும் தொடர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பதிலுக்கு பாஜகவினர் முதல்வர் படத்தையும் கலைஞர் படத்தையும் யார்வைத்தது என கேள்வியெழுப்பியுள்ளனர் பின்னர் பிரதமர் புகைப்படத்தை நீக்கினால் போராட்டம் நடத்துவோம் என எச்சரித்திருக்கின்றனர்.

`

சம்பவம் நடந்தபோது அதை ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பரவவிட்டார். இணையத்தில் இந்த வீடியோ வைரலானதையடுத்து பூலுவப்பட்டி பேரூராட்சி செயல் அலுவலர் பாஜகவினர் மீது புகாரளித்தார். புகாரை ஏற்றுக்கொண்ட போலீசார் பாஜக பாஸ்கரன் உள்ளிட்ட இருவர் மீது மூன்று பிரிவின்கீழ் வழக்கு பதிந்து கைது செய்துள்ளனர்.

```
```

ஏற்கனவே சமீபத்தில் ஆரம்பசுகாதார நிலையத்தில் பிரதமர் மோடி புகைப்படம் பொறித்த பேனரை மாட்டியதால் இருவர் கைதுசெய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

….உங்கள் பீமா