Friday, May 1, 2026
Home > அரசியல் > அனல் பறக்கும் ஐந்து மாநில தேர்தல்..! மறைந்த முப்படை தளபதியின் சகோதரர் பிஜேபியில்..!

அனல் பறக்கும் ஐந்து மாநில தேர்தல்..! மறைந்த முப்படை தளபதியின் சகோதரர் பிஜேபியில்..!

20-1-22/10.35am

டெல்லி : இன்னும் சிலநாட்களில் மணிப்பூர் உத்திரபிரதேசம் கோவா பஞ்சாப் உத்தரகாண்ட் உள்ளிட்ட ஐந்து மாநில சட்டமன்ற தேர்தல் வரவிருக்கும் நிலையில் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.

உத்திரபிரதேசம் கோவா இருமாநிலங்களில் பிஜேபியின் வெற்றி உறுதிசெய்யப்பட்ட நிலையில் பஞ்சாப் மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் இழுபறி நிலவலாம் என கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன. இதனிடையே உத்திரகாண்டில் பிஜேபி ஆட்சி இருந்த போதிலும் அங்கு காங்கிரஸ் கூட்டணி கடும் போட்டியை கொடுக்கும் என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் உத்திரகாண்டில் 70 தொகுதிகளுக்கான சட்டமன்ற தேர்தல் வருகிற பிப்ரவரி 14 அன்று தொடங்க உள்ளது. பிஜேபியும் காங்கிரசும் மாறி மாறி ஆட்சி அமைத்து வரும்நிலையில் காங்கிரஸ் 35 சீட்டுக்களும் பிஜேபி 32 சீட்டுக்களும் வெற்றிபெறும் என கருத்துக் கணிப்புகள் வெளிவந்தன. இந்த சூழலில் உத்தரகாண்ட் அரசியலில் திடீர் திருப்பமாக முன்னாள் ராணுவ வீரர் பிஜேபியில் தன்னை இணைத்துக்கொண்டது பரபரப்பை கிளப்பியுள்ளது.

மறைந்த முப்படை தளபதி பிபின் ராவத் அவர்களின் சகோதரரான கர்னல் அஜய் ராவத் உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி முன்னிலையில் நேற்று பிஜேபியில் இணைந்தார். இது உத்தரகாண்ட் அரசியலில் பெரும் திருப்புமுனையாக அமைந்துள்ளது. பிஜேபியில் இணைந்த ராவத் கூறுகையில் ” பிஜேபியில் இணைந்து பணியாற்ற வாய்ப்பளித்த பிரதமர் மோடிக்கு நன்றி.

பிரதமர் மோடியின் தொலைநோக்கு பார்வையும் எதிர்காலத்தை பற்றிய சிந்தனையுமே என்னை கவர்ந்தது. நான் பிரதமருக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்.” என தெரிவித்துள்ளார். ராவத்தின் வரவு உத்தரகாண்ட் பிஜேபியில் பெரும் மாற்றத்தை கொண்டுவரும் என பிஜேபியினர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

…..உங்கள் பீமா