Sunday, May 3, 2026
Home > செய்திகள் > தமிழக அரசின் பரிசு தொகுப்பில் பல்லி..! இதுதான் பொங்கல் பரிசா..?

தமிழக அரசின் பரிசு தொகுப்பில் பல்லி..! இதுதான் பொங்கல் பரிசா..?

07-01-22/18.00pm

திருத்தணி : தமிழக திமுக அரசு இந்த வருடம் பொங்கலுக்கு சிறப்பு தொகுப்பாக ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கும் 21 பொருட்கள் வழங்குவதாக அறிவித்திருந்தது.

பொங்கல் பண்டிகை வருவதையொட்டி நியாயவிலை கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு கடந்த இரண்டு நாட்களாக வழங்கப்பட்டு வருகிறது. இதை முதல்வர் முக ஸ்டாலின் இஸ்லாமிய குடும்பங்களுக்கு முதலாக மேடையில் கொடுத்து தொடக்கி வைத்தார். ஆனால் 21 பொருட்கள் கொடுக்கப்படும் என சொன்ன இடத்தில் வெறும் 17 அல்லது 18 பொருட்கள் மட்டுமே கொடுக்கப்படுவதாய் புகார் எழுந்துள்ளது.

மேலும் திமுக பிரமுகர்கள் அந்த பரிசு தொகுப்பில் சில பொருட்களை எடுத்துவிடுவதாகவும் குற்றசாட்டு எழுந்துள்ளது. மேலும் தமிழக திமுக அரசு கொடுத்த பொருட்கள் தரமற்றவையாக இருப்பதாக புகார் எழுந்துள்ள நிலையில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திமுகவின் பொங்கல் பரிசு பொருட்கள் குறைவாக இருப்பதாகவும் வெறும் 18 பொருட்களே கொடுக்கப்படுவதாயும் விமர்சித்தார்.

மேலும் பொங்கல் பரிசில் கொடுக்கப்பட்ட பொருட்களில் வெல்லம் போன்றவை மிக தரமற்ற முறையில் இருப்பதாக இணையத்தில் புகைப்படம் ஒன்று வைரலானது. இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் உள்ள நியாயவிலைக்கடையில் குடும்ப அட்டைதாரர் ஒருவருக்கு வழங்கப்பட்ட தொகுப்பில் இருந்த புளியில் பல்லி இருந்தது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாகியிருக்கிறது.

விடியல் அரசின் கமிஷன் கரப்சன் என்ற கொள்கை அப்பட்டமாக இதன்மூலம் வெளிப்பட்டுவிட்டது என எதிர்க்கட்சியினர் விமர்சித்து வருகின்றனர்.

…..உங்கள் பீமா