Saturday, June 10, 2023
Home > செய்திகள் > பாகிஸ்தானுக்கு ஓடுங்கள்..! சுப்ரமணியசாமி காட்டம்..!

பாகிஸ்தானுக்கு ஓடுங்கள்..! சுப்ரமணியசாமி காட்டம்..!

19-12-21/19.23pm

கேரளா ; நேற்று காலை பிஜேபி தலைவரான சஞ்சீவ் ஸ்ரீநிவாஸ் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த கும்பல் ஒன்று கடத்திகொண்டுபோய் பலமுறை கத்தியால் குத்தி படுகொலை செய்தது. இந்த கொலை கடந்த ஆர்.எஸ்.எஸ் தொண்டரை கொன்ற அதே பாணியை கையாண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த கும்பல் PFI அமைப்பை சேர்ந்தவர்கள் என பல அரசியல்கட்சி தலைவர்கள் கூறிவருகின்றனர்.

மேலும் இந்த அமைப்பினர் தொடர்ந்து கொலை சம்பவங்களில் ஈடுபட்டு வருவது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாகிவருகிறது. இதுவரை அந்த அமைப்பை சேர்ந்த யாரும் முறையாக கைதுசெய்யப்படவில்லை என்கிற விமர்சனமும் எழுந்துவருகிறது. சமீபத்தில் கொல்லப்பட்ட ஆர்.எஸ்.எஸ் தொண்டரின் கொலையில் தொடர்புடைய இந்த இஸ்லாமிய அமைப்பினர் தமிழகத்தில் உள்ள பொள்ளாச்சி அருகே காரை நிறுத்திவிட்டு தப்பிச்சென்ற அவலமும் நடந்தேறியது.

களியக்காவிளை காவல் அதிகாரி வில்சன் கொலையில் தொடர்புடைய இஸ்லாமிய அமைப்பை சேர்ந்தவர்களை சில வருடமாக தேடிக்கொண்டே இருக்கின்றனர். இந்நிலையில் கேரள பிராமண சபாவின் 51ஆவது ஆண்டுவிழா நிகழ்ச்சி முடிவில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக தலைவர் சுப்ரமணியசாமி ” கேரளாவில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. மத்திய அரசு பினராயி விஜயனின் அரசை கலைக்க உடனடியாக முன்வரவேண்டும். PFI அமைப்பு இந்த மண்ணின் அமைதியை சீர்குலைக்க நினைக்கிறது.

`

PFI அமைப்பு தங்களுடைய சித்தாந்தத்தை மற்றவர்களிடம் திணிக்க நினைத்தால் அவர்கள் பாகிஸ்தானுக்கு ஓடட்டும்” என காட்டமாக விமர்சித்துள்ளார். மேலும் அஸ்ஸாம் உத்திரபிரதேசம் உள்ளிட்ட சிலமாநிலங்களில் இந்த இஸ்லாமிய அமைப்புக்கு தடை விதித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

….உங்கள் பீமா