Saturday, October 5, 2024
Home > அரசியல் > 32 நாடுகளில் டிசம்பர் 1 முதல் சீனாவுக்கு முன்னுரிமை ரத்து..! ஓஒ.. இவங்கதான் காரணமா..?

32 நாடுகளில் டிசம்பர் 1 முதல் சீனாவுக்கு முன்னுரிமை ரத்து..! ஓஒ.. இவங்கதான் காரணமா..?

5-11-21/ 14.48

உலகில் உள்ள 40க்கும் மேற்பட்ட நாடுகள் சீனாவின் சந்தை தயாரிப்பு பொருட்களுக்கு சிறப்பு முன்னுரிமை கொடுத்துவந்தன. இறக்குமதி வரிகள் மற்றநாடுகளின் பொருட்களை காட்டிலும் மிக மிக குறைவு.

சீனாவின் தலையில் துண்டைப்போடும் அளவிற்கு 32 நாடுகள் முடிவெடுத்திருப்பது உலகையே திரும்பிப்பார்க்கவைத்துள்ளது. உலக சந்தையில் 40% பொருட்களை தன்வசம் கொண்டிருக்கும் சீன தற்போது பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கி வருவதாக சொல்லப்படுகிறது.

மேலும் கடந்த சிலநாட்களாக பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்கி குவிப்பதாகவும் அதனால் அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. சீன அரசே மக்களிடம் அத்தியாவசிய பொருட்களின் இருப்பை அதிகப்படுத்திக் கொள்ளுங்கள் என கூறியதாக சீன நிறுவனம் ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது.

`

அதனால் சீனா அண்டை நாடுகளுடன் போரில் இறங்க ஆயத்தமாகிறதா அல்லது மீண்டும் கோவிட் 19 தாக்குதல்கள் அதிகரித்திருக்கிறதா என பல சந்தேகங்களை சர்வதேச வல்லுநர்கள் கிளப்புகின்றன. இந்நிலையில் சீனாவுக்கு வரிவிலக்கு அளித்திருந்த 32 நாடுகள் வருகிற டிசம்பர் ஒன்றிலிருந்து சிறப்பு உரிமையை ரத்து செய்திருப்பதாக GACC (ஜெனரல் அட்மினிஸ்ட்ரேஷன் ஆப் கஸ்டம்ஸ் ஆப் சைனா) அறிக்கை வெளியிட்டுள்ளது.

மேலும் அந்த அறிக்கையில் “சந்தை பொருட்களின் தேவை அதிகமில்லாத இந்த நாடுகள் பின்வாங்குவதால் சீன பொருட்களின் மதிப்பு குறையப்போவதில்லை.பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள இந்த நாடுகளின் அறிவிப்பால் சீன பொருட்களின் விற்பனையோ சந்தை மதிப்போ மாறப்போவதில்லை” என தெரிவித்துள்ளது.

```
```

கடந்த சில வாரங்களாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஆகிய இருவரும் பொருளாதாரத்தில் முன்னேறி வரும் சிறு நாடுகளை சந்தித்திருந்தது குறிப்பிடத்தக்கது.அதன்பிறகு நடந்த இந்த மாற்றம் சீனாவுக்கு இந்தியா அடிக்கும் எச்சரிக்கை மணி என்று சர்வதேச விமர்சகர்களால் குறிப்பிடப்படுகிறது.

….உங்கள் பீமா

#china #india #preferetial #tariff #december1