Friday, May 3, 2024
Home > ஆன்மிகம் > மீண்டும் நிரூபணமானது..! தமிழகம் என்றுமே ஆன்மீக பூமி..!

மீண்டும் நிரூபணமானது..! தமிழகம் என்றுமே ஆன்மீக பூமி..!

20-3-22/11.10am

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் அருகே ஒரு நூற்றாண்டுக்கு முற்பட்ட ஜேஷ்டாதேவி சிலை கண்டெடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த இரு மாதங்களில் கண்டெடுக்கப்படும் ஏழாவது சிலை என செய்திகள் தெரிவிக்கின்றன.

காஞ்சிபுரம் உத்திரமேரூர் சாலையில் அமைந்துள்ளது ஆரப்பாக்கம் எனும் கிராமம். இந்த கிராமத்தில் அமைத்துள்ள பிடாரி கோவில் செல்லும் வழியில் உள்ள ஒரு கால்வாயில் தலைகள் மட்டுமே தெரிந்து மிச்ச பகுதிகள் மண்ணுக்கடியில் புதைந்திருந்த நிலையில் சிலை ஒன்றை அந்த கிராமவாசிகள் கண்டறிந்தனர். பின்னர் அந்த சிலையை தோண்டியெடுத்து சுத்தம் செய்து பத்திரமாக வைத்தனர்.

`

இதுகுறித்து தகவலறிந்த உத்திரமேரூர் வரலாற்று ஆய்வு மய்ய தலைவர் கொற்றவை ஆதன் கிராமத்திற்கு விரைந்தார். சிலையை ஆய்வுசெய்த ஆதன் “இது பல்லவர்காலத்தை சேர்ந்த மூத்த தேவி என அழைக்கப்படும் ஜேஷ்டாதேவி சிலை. இது 1200 ஆண்டுகள் பழமைவாய்ந்தது. இந்த சிலை 4 ஆதி உயரத்தில் 3 ஆதி அகலத்தில் மகன் மாந்தன் மகள் மாந்தியுடன் மூவரும் அமர்ந்த நிலையில் கண்ணைக்கவரும் வகையில் ஆபரணங்களுடன் அழகிய வேலைப்பாடுகளுடன் காட்சியளிக்கிறார்கள்.

```
```

ஜேஷ்டாதேவியின் வலப்பக்கம் மாடு தலை கொண்ட அவரது மகன் மாந்தி கையில் ஆயுதத்துடனும் வலப்பக்கம் தூய்மையின் அடையாளமான துடைப்பத்துடன் அவரின் சின்னமான காக்கை கொடியும் காணப்படுகிறது. நீண்ட அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய ஆடையோடு புன்னகை முகத்தோடு சிற்பமாக காட்சி தருகிறார்” என குறிப்பிட்டார். தமிழகம் ஒரு ஆன்மீக பூமி என்பதை இந்த சம்பவம் உலகுக்கு எடுத்துரைப்பதாக ஆரப்பாக்கம் கிராமவாசிகள் பெருமையுடன் கூறிவருகின்றனர்.

…..உங்கள் பீமா