Monday, May 6, 2024
Home > செய்திகள் > தொண்டுநிறுவனங்கள் அலறல்..! பின்னணியில் திமுக..??

தொண்டுநிறுவனங்கள் அலறல்..! பின்னணியில் திமுக..??

11-11-21/ 7.45am

சென்னை: கடந்த வருடம் சென்னையை வெள்ளம் புரட்டி போட்டபோது தொண்டுநிறுவனங்கள் சமூக ஆர்வலர்கள் என பலர் நிவாரணப்பணிகளில் ஈடுபட்டனர். சாதி மத பேதம் மறந்து மனிதநேயம் எனும் ஒரே குடைக்குள் மக்கள் ஒன்றுபட்டனர்.

கடந்த அதிமுக ஆட்சியில் அரசு இயந்திரங்கள் சுறுசுறுப்பாக இயங்கின. துப்புரவு பணியாளர்கள் மாநகராட்சி ஊழியர்கள் அமைச்சர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் தொண்டு நிறுவனங்கள் என வெள்ளத்தில் சிக்கி பரிதவித்த மக்களுக்கு நிவாரண உதவிகள் செய்து மீட்டனர்.

ஆனால் தற்போது நடைபெற்று வரும் திமுக ஆட்சியில் சொந்த தொகுதிக்குள்ளேயே திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் எம்பிக்கள் செல்ல மறுக்கின்றனர். அமைச்சர் சேகர்பாபுவின் சொந்த தொகுதி வெள்ளக்காடாய் காட்சியளிக்கிறது. முதல்வரின் தொகுதியான கொளத்தூர் மக்களின் நிலைமை பரிதாபம். ஆங்காங்கே வீடுகளுக்குள் மழைவெள்ளம் புகுந்து மக்கள் நடுரோட்டில் நிற்கின்றனர்.

`

மேலும் சில இடங்களில் திமுக அரசுக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் குதித்தனர். இந்நிலையில் எந்த ஒரு பேரிடர் என்றாலும் மக்களுக்கு நிவாரணங்களை வழங்க சமூக ஆர்வலர்கள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் முன்வந்து கைகொடுக்கும். ஆனால் இந்த வருடம் வெளியில்வர தயங்குகிறார்கள்.

```
```

இதுகுறித்து பேசிய ஒருவர், ” மக்கள் பணிக்கு சென்ற பிஜேபி தொண்டர்களை அமைச்சர் சேகர்பாபு மிரட்டினார். இது திமுக ஆட்சி தொண்டு நிறுவனங்கள் மக்களுக்கு நிவாரண உதவி செய்ய வந்தால் திமுகவினரால் தாக்கப்படுவோமோ என அஞ்சியே வெளியே வர பயப்படுகின்றனர்.” என கூறினார்.

…..உங்கள் பீமா