Wednesday, May 25, 2022
Home > Uncategorised > பாஜக பிரமுகர் கல்யாணராமன் கைது..! பின்னணியில் மிஷனரியா..? வெளியான ரகசியம்..!

பாஜக பிரமுகர் கல்யாணராமன் கைது..! பின்னணியில் மிஷனரியா..? வெளியான ரகசியம்..!

11-11-21/ 6.50am

பாஜக பிரமுகர் கல்யாணராமன் கைதுக்கு பல காரணங்கள் வெளியில் சொல்லப்பட்டாலும் மிக முக்கியமான காரணம் என்ன என்பது தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

சமீபத்தில் வெளியாகி பெரிய வெற்றியைப் பெற்ற “ருத்ர தாண்டவம்” படத்தைத் தொடர்ந்து அந்த வரிசையில் ஏற்கெனவே திட்டமிடப்பட்டு கிடப்பில் போடப்பட்டு இருந்த மூன்று கதைகளுக்கு உயிர் கொடுக்கப்பட்டது. கல்யாணராமன் நண்பர்கள் உட்பட பலர் இதுகுறித்து தீவிர ஆலோசனைகளை மேற்கொண்டனர்.

வரும் சித்திரை மாதத்தில் முதல்படம் வெளியிட முடிவு செய்தும் அதைத் தொடர்ந்து இரண்டு படங்கள் என 2022ம் ஆண்டில் மூன்று படங்களும் 2024 பாராளுமன்றத் தேர்தலுக்கு முன்னர் 15/20 படங்களை எடுப்பதாக தீர்மானிக்கப்பட்டு முதல் மூன்று படங்களுக்கான பட்ஜெட் தொகையும், முடிவு செய்யப்பட்டதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் சுமார் 15 கோடிகளில் மூன்று படங்களை எடுப்பது என முடிவு செய்யப்பட்டு அதற்கான முதலீட்டாளர்கள் சந்திப்பும் ஏற்பாடானது. அக்டோபர் முதல் வாரத்தில் துவங்கிய பேச்சுவார்த்தை அதிவேகமடைந்து பணம் பெரிய விஷயமில்லை படத்தை துவங்க ஆரம்ப கட்ட ஏற்பாடுகளை வேலைகளை துவங்கலாம் என்று முடிவு செய்யப்பட்டதாக தெரிகிறது.

முதல் படத்தின் கதை ஏற்கனவே முடிவு செய்யப்பட்டு விட்டது. அது மதமாற்றத்தின் மோசமான விளைவுகளை எடுத்துக் கூறும் விதமாக இருக்கும். இரண்டாம் படம் மற்றும் மூன்றாம் படங்களின் கதைச் சுருக்கத்தை கல்யாண்ஜி அக்டோபர் 9ம் தேதி முக்கியமான முதலீட்டாளர்களிடம் பகிர்ந்து கொண்டார்.

மூன்றாவது படம் திராவிடம் எப்படி நம்மை அடிமைப்படுத்தி நம்மை எப்போதும் தலையெடுக்காமல் இருக்கச் செய்ய அந்நிய கிறிஸ்தவ மிஷினரிகளின் சதியால் உருவாக்கப்பட்டது என்பதையும் பாதிரி கால்டுவெல் காலம் துவங்கி கடந்த 140 ஆண்டுகளாக தமிழகத்தில் கிறிஸ்தவ மிஷினரிகள் திட்டமிட்டு செய்து வரும் விஷமப் பிரச்சாரங்களை வெளிச்சம் போட்டு காட்டும் வகையில் அமையும் எனவும் கூறப்படுகிறது.

தமிழனை ஏமாற்றி தமிழகத்தை தவறான நபர்களின் கைக்கு கொண்டு சென்றது என்பதையும் திராவிட அமைப்புகள் எப்படி பிரிட்டிஷ்காரர்கள் என்று விளக்கமாக கூறப்பட்டுள்ளதாக தகவல். இதனால் திமுக மற்றும் ஈவேரா பெயரில் இப்போது நாட்டில் இருக்கும் அத்தனை அமைப்புக்களின் முகமூடி கிழிந்து இவர்களின் உண்மை முகம் மக்களுக்குத் தெரிய வரும்

குறிப்பாக இது தமிழகத்தில் மிகப்பெரிய மாற்றத்தை, தாக்கத்தை ஏற்படுத்தும். இவை அனைத்தையும் கல்யாணராமன் தனது முதலீட்டாளர்களிடம் தெளிவாக விளக்கினார். இந்த நிலையில் இவை அனைத்தையும் மோப்பம் பிடித்து விட்ட தமிழக காவல் துறை முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் கல்யாணராமனை கைது செய்து அவரது முயற்சிகளை தடுக்கும் ஏற்பாடுகளை செய்தனர்.


அதனால் கிறிஸ்தவர்களின் மதமாற்றத்தால் ஏற்படும் அபாயங்களை வெளிப்படுத்தும் விதமாக வெளியாக இருக்கும் படத்தை வெளிவராமல் தடுத்தல் மற்றும் திராவிடக் கட்சிகளின் உண்மை முகம் மக்களுக்குத் தெரியாமல் பார்த்துக் கொள்ளுதல் என்று ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்க திட்டமிட்டனர்.

தொடர்ந்து அக்டோபர் 13ம் தேதி காலை மும்பை சென்ற கல்யாண்ஜி தனது வேலைகளை முடித்துக் கொண்டு சென்னை விமான நிலையம் வந்து நேராக சினிமா தயாரிப்பு முதலீட்டாளர்களை சந்தித்தார்.அக்டோபர் 15-ம் தேதி நடந்த இரண்டாவது முதலீட்டாளர்கள் சந்திப்பில் அக்டோபர் 17-ம் தேதி விஜயதசமி அன்று படத்திற்கான பூஜை போட்டு துவக்குவது என்றும் திட்டமிடப்பட்டது.

உளவுத்துறை மூலமாக இவை அனைத்தையும் மோப்பம் பிடித்த கிறிஸ்தவ மதமாற்ற சக்திகள் இப்படி ஒரு படம் வெளியானால் தங்களுக்கும் தங்கள் மதமாற்ற வியாபாரத்திற்கும் பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என்பதால் இந்த முயற்சிகள் வெற்றியடைந்து விட்டக்கூடாது என்று திட்டமிட்டு தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள திமுக அரசு மற்றும் போலீஸ் மூலம் கல்யாண ராமனை முடக்கி அவரது திட்டங்களை முடக்கும் பணிகளை செய்தனர்.

அதனால் அவசர அவசரமாக அவர் மீது வழக்கைப் போட்டு இரவோடு இரவாக கல்யாண்ஜியை கைது செய்தனர். அக்டோபர் 16ம் தேதி மாலை 5.30 மணிக்கு போடப்பட்ட முதல் தகவல் அறிக்கையில் (FIR) உள்ள குற்றங்களின்படி அவருக்கு அவகாசம் கொடுத்து பிரிவு Section 41Aன் படி விசாரணைக்கு மட்டுமே அழைக்கலாமே அன்றி கைது செய்யக் கூடாது என்பதே சட்டம்.

ஆனால் மேலே சொன்ன படத்துவக்கத்தை ஆரம்பத்திலேயே முடக்குவதற்காக வேறு வழியின்றி அவரை அவசர அவசரமாக குண்டர் சட்டத்தின் கீழ் கைது என்னும் நாடகங்களை நிறைவேற்றி தனது குதர்க்கப் புத்தியைக் காட்டியுள்ளது திமுக.

சும்மா வரவில்லை இந்த சுதந்திரம். கல்யாணராமன் போன்றவர்களை இப்படி பொய் வழக்குப் போட்டு சிறையில் அடைப்பதால் முடக்கி விட முடியாது என்பதை காலம் உறுதி செய்யும்.

……வாசகர் செய்தி

Leave a Reply

Your email address will not be published.

விளம்பரம்

This will close in 20 seconds

error: Content is Protected! © The Madras Telegram