Friday, May 3, 2024
Home > அரசியல் > நீங்களா விலகறீங்களா இல்லை நானே விலக்கவா..! அண்ணாமலை சுழற்றிய சாட்டை….! விழுந்த முதல் விக்கெட்…!

நீங்களா விலகறீங்களா இல்லை நானே விலக்கவா..! அண்ணாமலை சுழற்றிய சாட்டை….! விழுந்த முதல் விக்கெட்…!

1-3-22/16.11pm

சென்னை : நேற்று செய்தியாளர்களை சந்தித்த பிஜேபி தலைவர் அண்ணாமலை மாவட்ட தலைவர்களை கடுமையாக எச்சரித்தார்.

தமிழக நகர்ப்புறத்தேர்தல் முடிந்த நிலையில் கமலாலயத்தில் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் மாநில நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். அதில் அவர் “வாக்காளர்களுக்கு பணம் கொடுக்காமலேயே சென்னையில் வென்றிருக்கிறோம். மக்களுடன் பழகி கட்சியை வலுப்படுத்துங்கள். கட்சியை வளர்க்க கடுமையான உழைப்பை தரவேண்டும்.

பிஜேபிக்கு வாக்களிக்க மக்கள் தயாராக இருக்கின்றனர். அதற்கேற்ப கட்சியை பலப்படுத்த நீங்கள் தயாராக வேண்டும். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் நகராட்சிகள் பேரூராட்சிகளில் வேட்பாளர்களை நிறுத்தமுடியாத மாவட்ட தலைவர்கள் தாங்களாகவே முன்வந்து விலகிக்கொள்வது நல்லது. குறிப்பிட்டு சொல்லவேண்டுமெனில் ஒரு மாவட்டத்தில் 30 சதவிகிதத்திற்கும் கீழாக வேட்பாளர்களை நிறுத்திய மாவட்ட தலைவர்கள் பதவியை விட்டு விலகிவிடுங்கள்.

`

இல்லையெனில் நானே விளக்கிவிடுவேன். கட்சிப்பணி செய்யாத பகுதிநிர்வாகிகளை மாவட்ட தலைவர்களே நீக்கிக்கொள்ளலாம் உள்ளூர் பிரச்சினை தொடர்பாக நீங்களே போராட்டம் அறிவித்துக்கொள்ளலாம்” என அந்த கூட்டத்தில் பேசினார். அதை தொடர்ந்து காரைக்குடி மாவட்ட மீனவரணி தலைவரான பிரதீப் என்பவர் நேற்று மாலை பிஜேபியிலிருந்து விலகி திமுகவில் இணைந்தார்.

அவரது சமூக வலைதளத்தில் கட்சி தன்னை பாதுகாக்கவில்லை என்பது போல குறிப்பிட்டிருந்தார். ஆனால் விசாரித்தபோது பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சினையில் ஒரு பெண் இவர்மீது வழக்கு தொடுத்திருப்பதாகவும் அதன்காரணமாக இவர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. இதுகுறித்து பேசிய திருப்பத்தூர் மற்றும் தேவகோட்டை பிஜேபியினர்,

```
```

“கட்சிப்பணியை செய்யாமல் மாற்று கட்சியினருடன் தொடர்புகொண்டு கட்சியின் நிர்வாகத்தை மதிக்காமல் நடந்த திருபுவனம் பாலா சிவகங்கை மாவட்ட முன்னாள் பிஜேபி தலைவர் செல்வம், பிரபு திருப்பத்தூர் கே.என். பரணி போன்ற ஆட்கள் கட்சியின் புல்லுருவிகள். அவர்களை நீக்கியதே சரி. இனி கட்சி வளரும்’ என கருத்து தெரிவிகின்றனர். மேலும் கட்சியில் பல தலைகள் வெளியேறும் என கமலாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

….உங்கள் பீமா