Wednesday, April 22, 2026
Home > செய்திகள் > மாணவி லாவண்யா வழக்கு..! தடை போடும் தமிழக அரசு..!

மாணவி லாவண்யா வழக்கு..! தடை போடும் தமிழக அரசு..!

2-3-22/11.35am

சென்னை : அரியலூரை சேர்ந்த லாவண்யா எனும் மாணவி கட்டாய மதமாற்ற அழுத்தத்தால் தற்கொலை செய்துகொண்டார் என கூறப்படுகிறது. மைக்கேல்பட்டியில் இயங்கிவரும் மிஷனரிக்கு சொந்தமான அந்த பள்ளி மீதான புகாரை நிர்வாகம் முற்றிலுமாக மறுத்திருந்த நிலையில் அந்த பள்ளியை சேர்ந்த ஆயா ஒருவர் கைதுசெய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டிருந்தார்.

ஜாமீனில் வெளிவந்த அவரை திமுக சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ் சிறைவாசலுக்கே சென்று வரவேற்றார். பொன்னாடை போர்த்தி மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தியிருந்தார். இந்நிலையில் தேசிய குழந்தைகள் உரிமைகள் மற்றும் பாதுகாப்பு ஆணையம் இந்த வழக்கை தாமாக முன்வந்து விசாரிக்க ஆரம்பித்தது.

NCPCR தனது குழுவை அனுப்பிய நாள்முதலே தமிழக அரசு விசாரணைக்கு முட்டுக்கட்டைபோடுவதாக சொல்லப்படுகிறது. இதை ஆணையமும் உறுதிப்படுத்தியிருந்தது. மேலும் கடந்த 28 பிப்ரவரியில் NCPCR ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தது. அதில் மாநில குழந்தைகள் நல ஆணைய அதிகாரிகள் சந்திப்பை தமிழக அரசு அதிகாரபூர்வமாக ரத்து செய்துள்ளதாக அறிக்கை வெளியிட்டுள்ளதை குறிப்பிட்டுள்ளது.

மாணவியின் மரண வழக்கில் மரணவாக்குமூலத்தை கூட தமிழக காவல்துறை ஏற்கமறுத்தது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தவழக்கில் சிபிஐ விசாரணைக்கும் தடைகோரியிருந்தது தமிழக அரசு. இந்த வழக்கில் தொடர்புடைய யாரை காப்பாற்ற நினைக்கிறது தமிழக அரசு என எதிர்க்கட்சியினர் கேள்வியெழுப்பிவருகின்றனர்.

தமிழக பிஜேபி தலைவர் அண்ணாமலை இதுகுறித்து தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.

….உங்கள் பீமா