Sunday, May 12, 2024
Home > செய்திகள் > விவசாயிகள் தொடர் போராட்டம்..! கண்டுகொள்ளாத ஊடகங்கள்..! கார்ப்பரேட் கைகூலியாய் மாறிப்போன திமுக..?

விவசாயிகள் தொடர் போராட்டம்..! கண்டுகொள்ளாத ஊடகங்கள்..! கார்ப்பரேட் கைகூலியாய் மாறிப்போன திமுக..?

28-11-21/11.45am

கோவை : திருப்பூர் கோயம்புத்தூர் பகுதியிலுள்ள விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களது கோரிக்கைகளை காது கொடுத்து கேட்க ஊடகங்களும் தயாராக இல்லை. தமிழக திமுக அரசும் தயாராக இல்லை என எதிர்க்கட்சியினர் விமர்சித்து வருகின்றனர்.

கோயம்புத்தூர் மாவட்டம் அன்னூர் பகுதியில் கார்ப்பரேட் நிறுவனத்தின் வசதிக்காக தமிழக அரசின் சார்பில் தொழில் பூங்கா ஒன்று அமைக்கப்பட உள்ளது. அதற்காக 3500 ஏக்கர் வரை விவசாய நிலங்களை திமுக கையகப்படுத்திட்டிருப்பதாக சொல்லப்படுகிறது. இதை எதிர்த்து விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

`

திருப்பூர் மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து பிஜேபியை சேர்ந்த ஒருவர் கூறுகையில் “கோவை அன்னூர் பகுதியில் ADD Industrial Parks என்ற வட இந்திய கார்ப்பரேட் நிறுவனம் 2006ம் ஆண்டு முதல் 4 ஏக்கர், 5ஏக்கர் என 15 கிலோ மீட்டர் சுற்றளவில் விவசாயத்திற்கு ஆகாத, தண்ணீர் வசதி இல்லாத, மாட்டு வண்டி மட்டுமே செல்ல கூடிய தரிசு நிலங்கள் மொத்தம் 500 ஏக்கர் வரை வாங்கி வைத்துள்ளது.

```
```

2012ம் ஆண்டு தமிழக அரசுடன் புரிந்துணர்வு செய்து கொண்ட இந்த நிறுவனம் 50,000 புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்குவோம் என உறுதியளித்தது. ஆனால் இன்றுவரை ஒருத்தருக்கு கூட வேலை வாய்ப்பு உருவாக்கவில்லை. இந்த நிறுவனம் வைத்திருக்கும் தரிசு நிலங்களை சுற்றி இருக்கும் 3333 ஏக்கர் நிலத்தை விவசாயிகளிடம் இருந்து பிடுங்கி இந்த வடக்கு இந்திய கார்ப்பரேட் நிறுவனத்திடம் கொடுக்கும் முயற்சிதான் அன்னூர் டிட்கோ இண்டஸ்ட்ரியல் பார்க்” என தெரிவித்தார்.

….உங்கள் பீமா