Wednesday, May 20, 2026
Home > அரசியல் > சிறப்பு சட்டமே தீர்வு..! தமிழக பிஜேபி தலைவர் அண்ணாமலை..!

சிறப்பு சட்டமே தீர்வு..! தமிழக பிஜேபி தலைவர் அண்ணாமலை..!

7-3-22/12.14pm

திருப்பூர் : நேற்று சென்னை மற்றும் திருப்பூர் பகுதிகளில் பிஜேபி கவவுன்சிலர்கள் சிலரின் அலுவலகத்தை திறந்துவைத்தார் தமிழக பிஜேபி தலைவர் அண்ணாமலை. மேலும் ஊத்துக்குளி பகுதியில் கிரைண்டர் தயாரிப்பு தொழில் முடங்கியுள்ள நிலையில் பாதிக்கப்பட்ட தொழிலாளிகளை நேரில் சென்று சந்தித்தார்.

தமிழக திமுக அரசு பதவியேற்றதும் கோயம்புத்தூர் பகுதிகளில் வெட்கிரைண்டர் தயாரிக்க பயன்படும் கற்களை வெட்டி எடுக்க அப்பகுதி மக்களுக்கு தடைவிதித்தது.

இந்த தடையால் கிரைண்டர் உற்பத்தி முழுவதும் தடைபட்டுள்ளது. மேலும் தொழிலாளிகள் தொடர்போராட்டம் நடத்தியும் தமிழக அரசு செவிசாய்க்கவில்லை.

இதைதொடர்ந்து நேற்று திருப்பூர் பகுதிக்கு சென்ற அண்ணாமலை மக்களை சந்தித்தார். முதல்வர் கவனத்திற்கு இந்த பிரச்சினையை எடுத்து செல்வதாகவும் போராடும் மக்களுக்கு உறுதுணையாக பிஜேபி நிற்கும் என உறுதியளித்தார். மேலும் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க பிஜேபி தனது திறமைவாய்ந்த வழக்கறிஞர்களை மக்களுக்கு உதவ நியமிக்கும் என உறுதியளித்தார்.

இதுகுறித்து தனது அறிக்கையில் “வெட் கிரைண்டர் இந்தியா முழுவதுமே கோயம்புத்தூரில் மட்டும் 75% தயாராகிறது. வெட் கிரைண்டருக்கு தேவையான கல், ஆட்டுக்கல், அம்மிக்கல் அனைத்தும் திருப்பூர்-ஊத்துக்குளி பகுதி குறிப்பாக கோவிந்தபாளையம் பகுதியில் இந்த அரிய வகை கல் (இந்த பகுதியில் மட்டும்தான்) கிடைக்கிறது.கடந்த 8 மாத காலமாக இந்த கல்குவாரிகள் தடைபட்ட கிடைக்கிறது. இதனால் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் தங்களுடைய வாழ்வாதாரத்தை இழந்து இருக்கின்றார்கள்.

https://twitter.com/MadrasTelegram/status/1500721176166887428?s=20&t=HrSQCP0YB8e2YHvqqARxBg

தமிழக பிஜேபி சார்பாக அந்த குடும்பங்களை இன்று சந்தித்து இதிலிருந்து அவர்கள் மீண்டு வருவதற்கு துணை இருப்போம் என்று உறுதி அளித்தோம்” என தெரிவித்துள்ளார்.

…உங்கள் பீமா