25-3/22/12.59pm
உத்திரபிரதேசம் : உத்திரபிரதேச முதல்வராக மீண்டும் யோகி ஆதித்யநாத் பதவியேற்க உள்ள நிலையில் இணையத்தில் யோகி 2.0 என ட்ரெண்டாகி வருகிறது.
இன்று மாலை நான்கு மணியளவில் யோகி ஆதித்யநாத் அவர்கள் பதவியேற்க இருப்பதை தொடர்ந்து பிரதமர் மோடி உள்துறை அமைச்சர் அமித்ஷா பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் உள்ளிட்டோர் கலந்துகொள்ள இருக்கின்றனர். விழாவுக்கு முலாயம் சிங் யாதவ் அகிலேஷ் யாதவ் மற்றும் மாயாவதி ஆகியோருக்கு சிறப்பு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. விழாவுக்கான பிரமாண்ட ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

இதனிடையே மந்திரிசபையில் இடம்பெற போகும் உத்தேச பட்டியல் வெளியாகியுள்ளது. மைனபுரி சதார் பகுதியை சேர்ந்த ஜெய்வீர் சிங், எட்டாவா தொகுதியை சேர்ந்த சரிதா பவுரியா, ரேபரேலியை சேர்ந்த அதிதி சிங் (இவர் காங்கிரசிலிருந்து விலகி சமீபத்தில் பிஜேபியில் இணைந்தார்), பல்லியாவை சேர்ந்த தயாசங்கர் சிங், அபர்ணா யாதவ், தியோரியாவை சேர்ந்த சலப்மணி திரிபாதி, கன்னூஜ் பகுதி அசீம் அருண்,
சரோஜினி நகர் ராஜேஸ்வர் சிங், மௌ பகுதி ராம்விலாஸ் சௌஹான், பரூகாபாத் நகர் டாக்டர் சுரபி, டாக்டர் சஞ்சய் நிஷாத், ப்ரயாக்ராஜ் தொகுதி வச்சஸ்பதி, தம்குஹிராஜ் பகுதி அஸீம் ராய், சுரேந்திர குஷ்வாக, நிதின் அகர்வால், பங்கஜ் சிங், சுனில்சிங், பல்லியா கேதகி, தியோபந் பகுதி குன்வர் பிரஜேஷ், அயோத்தியை சேர்ந்த ராமசந்திர யாதவ் ஆகியோர் அமைச்சர்களாக பொறுப்பேற்கலாம் என பிஜேபி தலைமை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் நேற்று உத்திரபிரதேச பிஜேபி சட்டமன்ற கட்சி தலைவராக யோகி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. யோகியின் அமைச்சரவை பட்டியலில் மூன்று பெண்கள் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
….உங்கள் பீமா
