Sunday, May 5, 2024
Home > செய்திகள் > உக்ரைன் மீது தாக்குதல்..! அடங்காத புதின்..! திருப்பியனுப்பப்பட்ட இந்திய விமானம்

உக்ரைன் மீது தாக்குதல்..! அடங்காத புதின்..! திருப்பியனுப்பப்பட்ட இந்திய விமானம்

24-2-22/11.12am

டெல்லி : உக்ரைன் எல்லைப்பகுதியில் நுழைந்த ரஷ்ய ராணுவம் முக்கிய நகரங்களில் தாக்குதல் தொடுத்திருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளன. இன்று காலை ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் சிறப்பு நேரலையில் பேசினார். உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கை தொடங்குவதாக அறிவித்தார்.

புதின் தொலைக்காட்சியில் பேசிய சில நிமிடங்களில் ரஷ்ய ராணுவம் உக்ரைன் மீது நடவடிக்கையை தொடங்கியது.

இதுகுறித்து பேசிய உக்ரைன் உள்துறை அமைச்சர் அண்டன் ஜெரோஷ்செங்கோ ” உக்ரைனின் ராணுவத்தலைமையகம், ஆயுத கிடங்குகள்மற்றும் கியெவ் கார்கோவ் டினிப்பர் ஆகிய நகரங்களில் ஏவுகணையை ரஷ்யா வீசியுள்ளது” என குறிப்பிட்டுள்ளார்.

நாடு தாக்குதலுக்குள்ளானதை வெளியுறவுத்துறை அமைச்சர் குலேபா உறுதிப்படுத்தியுள்ளார்.

`

மேலும் ” விளாடிமிர் புடின் முழு அளவிலான படையெடுப்பை துவங்கியுள்ளார். உக்ரைன் முழுவதும் மக்கள் பணிக்கு செல்லாமல் பதுங்கியுள்ளனர்.

இது ஆக்கிரமிப்பு போர். இதில் உக்ரைன் தன்னை பாதுகாத்துக் கொள்ளும். புதினை உலக நாடுகள் தடுக்க முடியும், தடுக்க வேண்டும். உலக நாடுகள் செயல்படவேண்டிய நேரம் இது” என கூறியுள்ளார்.

```
```

புதின் எத்தனை தடைகள் விதித்தாலும் உக்ரைனை சொந்தமாக்கிக்கொள்ளும் முடிவிலிருந்து மாறப்போவதில்லை என கூறியதாக செய்திகள் கசிகின்றன.

இதனிடையே 200000 வீரர்களை ரஷ்யா உக்ரைன் எல்லையில் நிறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் உக்ரைன் வாழ் இந்தியர்களை மீட்க சென்ற இந்திய விமானம் வான்வெளி தாக்குதல் அச்சத்தால் திருப்பியனுப்பப்பட்டுள்ளது.

காஷ்மீர் பிரச்சினையில் சட்டாம்பிள்ளையாக நடந்துகொள்ளும் எந்த ஒரு நாடும் அதை சார்ந்த ஊடகங்களும் புதினுக்கு எதிரான எந்த ஒரு கண்டனக்குரலையும் தெரிவிக்க மறுத்திருப்பது விந்தையளிக்கிறது.

……உங்கள் பீமா