Sunday, October 19, 2025
Home > செய்திகள் > இதெல்லாம் சின்ன அமவுண்ட்..! ஆஹா உயர்நீதிமன்றங்கள்..!

இதெல்லாம் சின்ன அமவுண்ட்..! ஆஹா உயர்நீதிமன்றங்கள்..!

5-4-22/13.00PM

புதுதில்லி : நன்கொடை மோசடி வழக்கில் அமலாக்கத்துறை சார்பில் பிரபல சர்ச்சைக்குரிய பத்திரிக்கையாளர் ராணா அய்யூப் மீது வழக்கு தொடுத்துள்ளது. மேலும் இரண்டு கோடி மதிப்பிலான சொத்துக்களை பறிமுதல் செய்துள்ளது.

இந்நிலையில் ராணா லண்டன் தப்பிச்செல்ல திட்டமிட்டிருந்ததாக சொல்லப்படுகிறது. கடந்த மார்ச் 29 அன்று அவர் லண்டனுக்கு செல்ல மும்பை விமான நிலையம் வந்தபோது அவரை கையும்களவுமாக அதிகாரிகள் பிடித்தனர். மேலும் அவருக்கு லுக் அவுட் நோட்டிஸ் விடப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே ராணா டெல்லி உயர்நீதிமன்றத்தில் அவசர மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

பல முக்கிய வழக்குகள் இன்று விசாரணைக்கு வராத நிலையில் ராணா அய்யூப் மனு கொடுத்த 24 மணிநேரத்திற்குள் டெல்லி நீதிமன்றம் இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்தது. மேலும் அமலாக்கத்துறை சார்பில் வாதிட்ட கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் அவர் மும்பைக்கு உடனடியாக திரும்பவேண்டும் எனவும் ராணாவின் பயண திட்டங்கள் தெரியப்படுத்தப்பட வேண்டும் எனவும் வாதிட்டார்.

மேலும் ராணா கோவிட் நிவாரணம் எனும் பெயரில் பலகோடி திரட்டியதாகவும் அதற்கு நிவாரணப்பணிகள் என்ற பெயரில் போலியான பில்கள் சமர்ப்பிக்கப்பட்டதாகவும் வாதாடினார். இதைக்கேட்ட நீதிபதிகள் “அவருக்கு வயதான பெற்றோர்கள் இருக்கிறார்கள். மேலும் 10-12 கோடி நிதி என்பது அவ்வளவு பெரிய தொகை இல்லை. அவர் பயணக்குறிப்புகளை வெளியிடவேண்டும்.

சிறிய அளவில் பிணைத்தொகை செலுத்திவிட்டு அவர் செல்லலாம்” என தீர்ப்பளித்திருக்கின்றனர். ஆக நீதிமன்றங்களின் படி 10கோடி என்பது பெரிய தொகை இல்லை. பெற்றோர்கள் வயதானவர்களாக இருந்தால் வெளிநாடு செல்வதற்கு குற்றம் சாட்டப்பட்டவருக்கு தடை இல்லை என சரித்திரபுகழ் வாய்ந்த தீர்ப்பை கூறியுள்ளது டெல்லி உயர்நீதிமன்றம்.

இதுபோல சென்னை உயர்நீதிமன்றம் கொடுத்த ஒரு தீர்ப்பில் ” திருமணம் கடந்த கள்ள உறவு கொண்டுள்ள கணவர் தணடனைக்குரியவர்” என கூறி ஆறுமாத கால சிறைத்தண்டனையும் வழங்கியிருந்தது. இதேபோல ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் கூறிய ஒரு தீர்ப்பில் ” மனைவி கணவருடன் இல்லாமல் அவரது நண்பருடன் உறவு கொண்டிருந்தால் அது குற்றமாகாது” என தீர்ப்பளித்தது குறிப்பிடத்தக்கது.

சட்டவல்லுனர்கள் கூறுகையில் “1900 இல் ராயல் பிரிட்டிஷ் இந்தியா எனும் பெயரில் எழுதப்பட்ட சட்டம் ஆப் இந்தியா பெயர்மாற்றம் செய்யப்பட்டது மறுபிரதி எடுக்கப்பட்டது. சட்டங்கள் தற்போதைய காலத்திற்கு ஏற்ப மாற்றப்பட வேண்டும். இது மிகவும் அவசியமானது” என குறிப்பிடப்பட்டுள்ளது.

……உங்கள் பீமா