11-01-2022/16.50pm
தெலுங்கானா: பழங்குடியின ஊழியர்களுக்கு எதிரான செயலில் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் ஈடுபட்டு வருவதாக ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுக்கு ஆதரவாக போராடி வரும் பிஜேபி மாநிலத்தலைவர் பண்டி சஞ்சய் போலீசாரால் தாக்கப்பட்டு அராஜகமான முறையில் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில் கடந்த 9 ஜனவரியில் வாரங்கல் பகுதியில் நடந்த ஒரு பொதுக்கூட்டத்தில் அஸ்ஸாம் முதல்வரான ஹிமந்தா பிஸ்வாஸ் கலந்துகொண்டார். கூட்டத்தில் பேசிய அவர் தெலுங்கானா அரசின் செயல்பாடுகளை விமர்சித்தார். மேலும் ” இந்தியாவின் பண்டைய பெருமை திரும்ப வரும். அப்போது ஒவைசி அவ்ரங்கசிப் போன்றோர்கள் ஆர்டிக்கில் 370 போல வரலாற்றில் இருந்து காணாமல் போய்விடுவார்கள்.
பழைய இந்தியா மீண்டு வருகையில் இவர்கள் போன்றோருக்கு புதிய இந்தியாவில் இடம் இருக்காது. நிஜாம்களின் வரலாற்றை நீண்ட நாள் படிக்க முடியாது. அந்த நிலை மாறும்” என குறிப்பிட்டார். அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்தா பண்டைய இந்தியாவின் பெருமைகளை குறிப்பிட்டு வந்தேறிகள் இனி நுழையமுடியாது என குறிப்பிட்டது ராணா அய்யூப் போன்ற இடதுசாரி மற்றும் இந்தியாவுக்கெதிரான மனநிலை கொண்டோரை வெகுவாக பாதித்ததாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இன்று ராணா அய்யூப் தனது ட்விட்டரில் ” நரேந்திர மோடியின் முதல்வர் இந்திய முஸ்லிம்களை அழித்துவிடுவோம் என பேசியிருக்கிறார். இதில் உடனடியாக ஐநா சபை தலையிட வேண்டும். அமெரிக்க ஜனாதிபதி தலையிட்டு பிரச்சினையை முடித்து தரவேண்டும்” என்கிற ரீதியில் பதிவிட்டு அமெரிக்க அதிபர் மற்றும் ஐநா சபை மனித உரிமைகள் கழகம் என பலரை டேக் செய்துள்ளார்.


இவரது பதிவில் பின்னூட்டம் இட்ட ஒரு நபர் ” போட்டஸ் வந்தா என்ன புடுங்கிவிடும். மப்பு கலையலேன்னா எலுமிச்சை சாறை குடிச்சுட்டு குப்புறப்படு” என கூறியுள்ளார்.
….உங்கள் பீமா