15-4-22/10.48AM

புதுதில்லி : சிறுபான்மையினர் என அழைக்கப்படும் இஸ்லாமியர்களுக்கு எதிராக வன்முறையை தூண்டும் விதத்தில் ஹரித்துவார் மற்றும் டெல்லியில் ஹிந்து யுவ வாஹினி அமைப்பு மற்றும் நரசிங்காநந்த் ஸ்வாமிகள் மீது வழக்கு தொடுக்கப்பட்டது.
கடந்த17 மற்றும் டிசம்பர் 2021 ல் டெல்லி மற்றும் ஹரித்துவாரில் இஸ்லாமியர்களை கொலை செய்யுங்கள் என ஹிந்து அமைப்புகள் கூறியதாக பாடினா பாட்னா உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி மற்றும் பத்திரிகையாளர் குர்பான் அலி ஆகியோர் மனு ஒன்றை அளித்திருந்தனர். அந்த மனுவில் ” இஸ்லாமிய மக்களுக்கு எதிராக வன்முறையை தூண்டும் விதத்தில் பேசியவர்கள் மீது டெல்லி காவல்துறை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.
ஹிந்து யுவவாஹினி அமைப்பின் தலைவர்கள் மற்றும் நரசிங்காநந் ஆகியோர் பேசிய வீடியோக்கள் இணையதளத்தில் கிடைக்கிறது” என தெரிவித்திருந்தனர். நேற்று வழக்கு குறித்த பிராமணபத்திரத்தை தாக்கல் செய்த டெல்லி காவல்துறை ” அனைத்து வீடியோக்களும் ஆய்வுக்குட்படுத்தப்பட்டு தீவிர விசாரணைக்கு பின்னர் அந்த வீடியோக்களில் எந்த ஒரு வெறுப்பை உண்டாக்கும் பேச்சுக்கள் இல்லை என உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது.
மனுதாரர்கள் விளமபரத்திற்க்காக வழக்கு தொடுத்திருக்கிறார்கள். காவல்துறையிடம் இதுகுறித்த புகாரை அளிக்காமல் நேரடியாக நீதிமன்றத்தை நாடிவந்த நோக்கம் என்ன. வெறுப்பான பேச்சுக்கள் என்பது மனுதாரர்களின் கற்பனை. இந்த புகார் முடித்துவைக்கப்பட்டுள்ளது. பலகட்ட ஆய்வுக்கு பின்னரே இந்த புகார் முடித்து வைக்கப்பட்டுள்ளது” என அந்த பிராமணபத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
முக்கிய செய்தி ; இந்தியா வன்முறைக்கு எதிரானது. ஆனால் அதே நேரத்தில் கையில் தடியையும் ஏந்திச் செல்லும்.- ஆர்.எஸ்.எஸ்.மோகன் பகவத் ஹரித்துவார் கூட்டத்தில்
மேலும் இதை விசாரித்த நீதிபதிகள் டெல்லி போலீசார் வழக்கை முடித்து வைத்தது செல்லும் என கூறியுள்ளனர். இதனிடையே ஹரித்துவார் தொடர்பான புகாரின் நிலைமை குறித்து ஏப்ரல் 22 க்குள் பிராமணபத்திரம் தாக்கல் செய்ய உத்திரகாண்ட் மாநில அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
…..உங்கள் பீமா
pls follow us on https://news.google.com/publications/CAAqBwgKMP78qAsw8IfBAw?hl=en-IN&gl=IN&ceid=IN%3Aen
