Sunday, October 1, 2023
Home > அரசியல் > சீண்டிய திமுக எம்பி..! நெத்தியடி கொடுத்த பிஜேபி தலைவர்..!

சீண்டிய திமுக எம்பி..! நெத்தியடி கொடுத்த பிஜேபி தலைவர்..!

9-11-21/ 12.20pm

சென்னை: தமிழகம் முழுவதும் கனமழை பெய்து கொண்டிருக்க சென்னையே வெள்ளத்தில் தத்தளித்துக் கொண்டிருக்க திமுக எம்பி பிஜேபியினரை சீண்டுவதில் மட்டும் குறிக்கோளாய் நிற்கிறார் என பிஜேபியினர் விமர்சித்து வருகின்றனர்.

தர்மபுரி தொகுதி திமுக எம்பியாக இருப்பவர் செந்தில். இவர் ஒரு மருத்துவரும் கூட. தனது தொகுதி மக்களின்நலனை கருத்தில் கொள்ளாமல் இணையத்தளத்திலேயே கண்ணும்கருத்துமாய் இருக்கிறார் என எதிர்க்கட்சியினர் விமர்சனத்தை முன்வைக்கின்றனர்.

`

பிஜேபி பெரும்புள்ளி கல்யாணராமன் மீது வழக்கு தொடுக்க காரணமாய் இருந்தவர் இவரே. மேலும் எதிர்க்கருத்து கூறும் யாராய் இருந்தாலும் தனது அதிகாரத்தை பயன்படுத்தி அவர்களை சிறையில் தள்ளுவதும் அவர்களின் இணைய கணக்கை முடக்குவதுமே வேலையாய் செய்கிறார் எனவும் குற்றம் சுமத்துகின்றனர்.

```
```

இந்நிலையில் பிஜேபி தலைவர் எஸ்.ஆர்.சேகர் அவர்களது ட்விட்டர் கணக்கை யாராவது ரிப்போர்ட் அடித்து முடக்குங்கள் என தனது பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதற்கு பதிலடி கொடுத்த எஸ்.ஆர்.சேகர் “சென்னை வெள்ளத்தில் தவிக்கவில்லை. முதலமைச்சர் வெயிலுக்காக ரெயின்கோட் ரப்பர் ஷூ குடைபிடித்துக்கொண்டு காய்ந்து விரிசல் விழுந்த தரையை பார்வையிடுகிறார். அப்படித்தானே டாக்டர் செந்தில் சார்” என நறுக்கென பதிலளித்துள்ளார்.

….உங்கள் பீமா