2016ல் ரிலீசாகி உலக சினிமா ரசிகர்களின் இதய துடிப்பை எகிற வைத்த படம் டோன்ட் ப்ரீத். ஒரு கண்பார்வையற்றவர் சைக்கோவாக இருந்தால் அதுவும் அவர் ராணுவ வீரராக இருந்தால்.. அப்பப்பா ஒரே அறையில் முழு இருட்டில் எடுக்கப்பட்டு ரசிகர்களை சீட்டின் நுனியில் நிறுத்திய திரைப்படம் டோன்ட் ப்ரீத். இந்த படத்தை தயாரித்து கதை எழுதி இயக்கியவர் பெடி அலுவரெஸ். இந்த கதையில் துணை கதாசிரியராக பணியாற்றியவர் ரோடோ ஆல்வாரெஸ்.
டோன்ட் ப்ரீத் படத்தில் தாறுமாறான வேடத்தில் கதாநாயகனாக வில்லனாக நடித்தவர் (வாழ்ந்தவர் என்றே சொல்லலாம்) ஸ்டீபன் லேங். அந்த படத்தில் தன இயல்பான நடிப்பால் அனைவரையும் கவர்ந்திழுத்தவர் இவர். ஆஸ்கர் ஜஸ்ட் மிஸ். மனிதர் கண்பார்வையற்றவராக புகுந்து விளையாடியிருப்பார். அவருக்கென்றே தனி ரசிக பட்டாளம் உருவாகிவிட்டது.
இந்நிலையில் டோன்ட் ப்ரீத் படத்தின் இரண்டாம்பாகம் உருவாகி வந்தது சீனத்தொற்றின் தாக்கத்தால் தாமதமாகி தற்போது செப்டம்பர் 17 அன்று டோன்ட் ப்ரீத்2 வரவிருக்கிறது. இந்தி தமிழ் தெலுங்கு ஆகிய பிராந்திய மொழிகளில் தயாராகியிருக்கிறது.
இதன் டைரக்டர் ரோடோ ஆல்வாரெஸ். முதல் பாகத்தின் கதாசிரியர். இவர் ஈவில் டெட், டெக்ஸாஸ் செயின் ஷா போன்ற திகில் படங்களை இயக்கி தயாரித்தவர். அதனால் இந்த திரைப்படத்தின் எதிர்பார்ப்பு எகிறியிருக்கிறது.