Monday, May 20, 2024
Home > செய்திகள் > ஹேக் செய்யப்பட தேசிய பேரிடர் மீட்புப்படையின் ட்விட்டர்…! சீனாவின் சதியா..?

ஹேக் செய்யப்பட தேசிய பேரிடர் மீட்புப்படையின் ட்விட்டர்…! சீனாவின் சதியா..?

23-1-22/11.15AM

டெல்லி : தேசிய பேரிடர் மீட்புப்படையின் ட்விட்டர் அக்கவுண்ட் ஹேக் செய்யப்பட்டு சிலமணிநேரம் முடக்கப்பட்டது. இதன்பின்னால் வெளிநாட்டு சதி இருக்குமா என விசாரணை நடைபெற்று வருகிறது.

தேசிய பேரிடர் மீட்புப்படையின் (NDRF) ட்விட்டர் அக்கவுண்ட் ஜனவரி 22 நேற்று சில நிமிடங்கள் ஹேக் செய்யப்பட்டதாக NDRF ஜெனரல் டைரக்டர் அதுல கார்வால் தெரிவித்துள்ளார். கடந்த சிலநாட்களுக்கு முன்னர் பிரதமர் மோடியின் அக்கவுண்ட் ஹேக் செய்யப்பட்டு க்ரிப்டோ கரன்சி பற்றிய பதிவு ஒன்றும் போடப்பட்டிருந்தது.

`

சிலமணிநேரத்தில் அக்கவுண்ட் மீட்டெடுக்கப்பட்டு விசாரணை நடைபெற்றது. இதுவரை அந்த மர்ம நபர் யார் என்று மத்திய அரசின் தரப்பில் விளக்கம் தெரிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

```
```

இந்நிலையில் தேசிய பேரிடர் மீட்புப்படையின் அக்கவுண்டும் சில நிமிடங்கள் ஹேக் செய்யப்பட்டு மீண்டும் சரிசெய்யப்பட்டது பரபரப்பை கிளப்பியுள்ளது. இதுகுறித்து பேசிய உயரதிகாரிகள் இது தொழில்நுட்பக்கோளாறால் ஏற்பட்டிருக்கலாம் என கருது தெரிவிக்கும் வேளையில் இது சீனாவின் சதியாக இருக்கலாம் என எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றனர்.

….உங்கள் பீமா