23-1-22/15.39pm
சென்னை : தமிழக முதல்வர் எந்த கூட்டத்தில் பேசினாலும் தனக்கு எழுதிக்கொடுக்கப்பட்டிருக்கும் துண்டு சீட்டை பார்த்தே உரையாற்றுவார் என பிஜேபியினர் விமர்சனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் துண்டு சீட்டு பற்றி முதல்வர் முக ஸ்டாலின் தற்போது பேசியிருக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
முதல்வர் முக ஸ்டாலின் ஒரு கூட்டத்தில் உரையாற்றுகையில் “தலைவர் கலைஞர் எனக்கு என்ன பெயர் சூட்ட வேண்டும் என நினைத்திருந்தார் என்றால் அய்யாதுரை. அய்யாதுரை இதில் அய்யா என்பது யாரென்று எல்லோருக்கும் தெரியும். அய்யா என்றால் பெரியார். துரை என்றால் அண்ணாதுரை. அண்ணாதுரையிலிருந்து துரையை எடுத்து அய்யாதுரை என பெயரிட நினைத்திருந்தார் எனது தந்தை கலைஞர் கருணாநிதி.
அப்போது ஜோசப் ஸ்டாலின் இறந்த நாள். கடற்கரையில் நடந்துகொண்டிருந்த இரங்கல் கூட்டத்தில் தலைவர் கையில் ஒரு துண்டு சீட்டு கொடுக்கப்பட்டது. அதை பார்த்த தலைவர் அதில் உங்களுக்கு ஒரு மகன் பிறந்திருக்கிறார் என்ற செய்தியை அறிந்ததும் கூட்டத்தினரிடையே எனக்கு மகன் பிறந்திருக்கிறார் என கூறி எனக்கு ஸ்டாலின் என பெயரிட்டார். இது வரலாறு” என தெரிவித்தார்.
ஆனால் ஜோசப் ஸ்டாலின் இறந்த தினம் 5 மார்ச் 1953. முதல்வர் முக ஸ்டாலின் பிறந்த தினம் 1 மார்ச் 1953. இந்த செய்தியை முதல்வரின் வீடியோவை வெளியிட்டு நெட்டிசன்கள் தொடர்ந்து விமர்சித்து வருகின்றனர்.
…..உங்கள் பீமா
