Monday, May 20, 2024
Home > அரசியல் > இஸ்லாமியர்கள் சிறுபான்மையினர் அல்ல..! சட்டசபையில் முதல்வர்..!

இஸ்லாமியர்கள் சிறுபான்மையினர் அல்ல..! சட்டசபையில் முதல்வர்..!

16-3-22/14.15pm

அஸ்ஸாம் : இஸ்லாமியர்கள் சிறுபான்மையினர் இல்லை. அசாம் மக்களின் பயத்தை போக்கும் கடமை இஸ்லாமியர்களுக்கு இருக்கிறது என சட்டசபையில் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா ஷர்மா கூறினார்.

இன்று அஸ்ஸாம் சட்டசபையில் பட்ஜெட் மீதான ஆளுநர் உரையின் போது நடந்த விவாத்தில் அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்தா பேசினார். அவர் கூறியதாவது ” அஸ்ஸாம் மக்கள் தொகையில் 35 சதவிகிதம் இஸ்லாமியர்கள் இருக்கின்றனர். அவர்களை சிறுபான்மையினர் என கருத முடியாது. காஷ்மீரி பைல்ஸ் போல அஸ்ஸாமிலும் நிகழந்துவிடும் என்கிற மற்ற சமூகத்தினரின் பயத்தை போக்க வேண்டியது இஸ்லாமியர்களின் கடமை.

இன்று இஸ்லாமியர்கள் பலர் எதிர்க்கட்சி எம்.எல்.ஏக்களாக தலைவர்களாக இருக்கின்றனர். சமூக நல்லிணக்கம் ஒருவழிபாதையல்ல என்பதை உணர்ந்துகொள்ள வேண்டும். அஸ்ஸாம் பலன்கிடையின மக்களின் கலாச்சாரத்தை பண்பாட்டை காக்க வேண்டியது இஸ்லாமியர்களின் பொறுப்பு. ஆக்கிரமிக்கப்பட்ட பழங்குடியின மக்களின்நிலத்தை அவர்கள் திரும்ப வழங்க முன்வரவேண்டும். இன்னும் பத்துவருடங்களில் அவர்கள் சிறுபான்மையினராகி காஷ்மீர் சம்பவம் போல நிகழ்ந்துவிட கூடாது.

`

அஸ்ஸாம் மக்கள் பயத்தில் இருக்கிறார்கள். கலாச்சாரம் மற்றும் பண்பாடு காக்கப்படவேண்டும். காஷ்மீரில் ஹிந்துக்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டார்கள். அதேபோல சம்பவம் இங்கும் நடந்துவிடுமோ என அச்சத்தில் உள்ளனர். இஸ்லாமியர்கள் பெரும்பான்மையினர் போல நடந்துகொள்ளவேண்டும். மேலும் அஸ்ஸாம் மக்களுக்கு காஷ்மீர் சம்பவம் போல மீண்டும் நடக்காது என உறுதியளிக்க வேண்டும்” என கூறினார்.

மேலும் காஷ்மீரி பைல்ஸ் திரைப்படத்தை காண அரசு ஊழியர்களுக்கு ஊதியத்துடன் அரைநாள் விடுப்பு வழங்கப்பட்டுள்ளது.

```
```

இதனிடையே மேற்கு வங்க ஆளுநர் ஜெக்தீப் தங்கர் காஷ்மீரி பைல்ஸ் படத்தை வெகுவாக பாராட்டியுள்ளார்.

…..உங்கள் பீமா