Tuesday, May 14, 2024
Home > செய்திகள் > கோவில் குளத்தில் போதையில் இஸ்லாமிய இளைஞர்கள்..? அர்ஜுன் சம்பத் அறிக்கை..!

கோவில் குளத்தில் போதையில் இஸ்லாமிய இளைஞர்கள்..? அர்ஜுன் சம்பத் அறிக்கை..!

23-11-21/16.02pm

ஈரோடு : கோவிலுக்கு சொந்தமான புனிதமான தெப்பக்குளத்தில் இளைஞர்கள் சிலர் மதுபாட்டில்கள் மற்றும் அசைவ உணவுகளுடன் குளித்து அசுத்தம் செய்ததாக புகார் எழுந்துள்ளது.

திமுக ஆட்சியில் தொடர்ந்து இந்து மத நம்பிக்கைகள் அவமதிக்கப்பட்டு வருவதும் இந்துக்களின் கோவில்கள் தகர்க்கப்பட்டு வருவதும் தொடர்கதையாக உள்ளது. இந்நிலையில் நேற்று மாலை நான்கு மணி அளவில் இஸ்லாமிய இளைஞர்கள் கோவில் குளத்தில் மதுபாட்டில்களோடு இறங்கியதாக சொல்லப்படுகிறது. இதுகுறித்து அனிதா இந்து அமைப்பினர் பலத்த கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்து மக்கள் கட்சி அர்ஜுன் சம்பத் தனது அறிக்கையில் “ஈரோடு மாவட்டம் தூக்கநாயக்கன்பாளையம் அருள்மிகு மத்தாள கொம்பு விநாயகர் ஆலயத்தின் புனிதநீர் தெப்பக்குளத்தில் கோபிசெட்டிபாளையத்த சேர்ந்த சுமார் 20க்கும் மேற்பட்ட இஸ்லாமிய இளைஞர்கள் நேற்று 21.11.2021 மாலை 4 மணி அளவில் மாட்டுக்கறி பிரியாணி சமைத்தும் சாராயம்அருந்தியவாறு,

`

இந்துக்கள் புனித தீர்த்தம் எடுக்கும் குளத்தில் இறங்கி அட்டகாசம் செய்தும் இவ்வாறு செய்வது தவறு என கண்டித்த ஹிந்து இளைஞர்களிடம், எனக்கு நான்கு குழந்தைகள் உள்ளது நான் எதற்கும் பயப்பட மாட்டேன், உன்னால் முடிந்ததை பார் என்று கூறியவாறு இந்துக்களின் புனித தீர்த்த குளத்திற்குள் இறங்கி அசுத்தப்படுத்தி அநாகரீகமாக நடந்து கொண்டதை இந்து மக்கள் கட்சி சார்பாக வன்மையாக கண்டிக்கின்றோம்..

```
```

இந்த சம்பவம் தொடர்பாக இந்து மக்கள் கட்சி நிறுவன தலைவர் அர்ஜுன் சம்பத் அவர்களிடம் விளக்கிக் கூறப்பட்டது இதுதொடர்பாக டி என் பாளையம் ஒன்றியத்தில் உள்ள அனைத்து இந்துக்களையும் திரட்டி அர்ஜுன் சம்பத் அவர்கள் தலைமையில் ஒரு நாள் உண்ணாவிரத போராட்டம் ஆனது விரைவில் டிஎன் பாளையம் அண்ணா சிலை அருகே நடைபெற உள்ளது. ” என தெரிவித்துள்ளார்.

….உங்கள் பீமா