3-11-21/ 20.30pm
இருசக்கர வாகனத்திற்கு எரிபொருள் நிரப்ப வந்த இஸ்லாமிய இளைஞர் ஒருவர் பங்கிற்கு தீவைக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத் மாநிலம் சூரத்தில் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்த பெட்ரோல் பங்கிற்கு இரண்டு இளைஞர்கள் எரிபொருள் நிரப்பவந்தனர். அதில் ஒருவர் திடீரென மறைத்துவைத்த பட்டாசுகளை கொழுத்த முயன்றார்.
அதைக்கண்ட பங்க் ஊழியர் ஓடோடி சென்று தடுத்தார். சிறிது நேர வாக்குவாதத்திற்குப் பிறகு தீவைக்க முயன்ற இளைஞர் பெயர் முகம்மது இர்பான் குரேஷி என தெரியவந்தது. அதன்பின்னர் பங்க் மேலாளர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரித்ததில் இருவரும் உள்ளூர்வாசிகள் என தெரியவந்ததாக சொல்லப்படுகிறது.
மேலாளர் மோதிலால் சௌத்ரி உம்ரா காவல்நிலையத்தில் புகாரளித்தார். அதன்பிறகு அந்த இளைஞர்கள் இருவர் மீதும் இந்திய தண்டனை சட்டப்பிரிவு 285,286,336 ஆகியவற்றின் கீழ் வழக்கு பதியப்பட்டு கைதுசெய்யப்பட்டனர். இதனால் அந்த பகுதியே பரபரப்புக்குள்ளானது.
பங்க் ஊழியர்களின் சாமர்த்தியத்தால் மிகப்பெரிய விபத்து தடுக்கப்பட்டது. பல நூறு உயிர்கள் காப்பாற்றப்பட்டிருப்பதாக உம்ரா பகுதி மக்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
….உங்கள் பீமா
#umra #muslimyouth #petrolbulk #crackers
pic credit : the hindu
