Saturday, July 27, 2024
Home > செய்திகள் > முதல்வரை விமர்சித்த மாணவருக்கு நேர்ந்த பரிதாபம்..! குடும்பத்தினர் கதறல்..!

முதல்வரை விமர்சித்த மாணவருக்கு நேர்ந்த பரிதாபம்..! குடும்பத்தினர் கதறல்..!

20-2-22/15.12pm

மேற்குவங்கம் : மமதா பானர்ஜியின் அரசின் சர்வாதிகாரப்போக்கை கண்டித்தும் அரசின் ஊழல்கள் நிர்வாகத்திறமையின்மையை சுட்டிக்காட்டியும் கடந்த நான்கு மாதங்களுக்கு மேலாக போராட்டம் நடத்திவந்த கல்லூரி மாணவர் கொல்லப்பட்டிருப்பது சர்சையைக்கிளப்பியிருக்கிறது.

இந்திய மதசார்பற்ற முன்னணி இயக்கத்தின் மாணவர் அமைப்பின் தலைவராக இருப்பவர் அனிஸ்கான். இவர் ஹௌரா மாவட்டம் அம்தா பகுதியில் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். நேற்று நள்ளிரவு காவல்துறை சீருடை அணிந்த நபர்களால் வீட்டின் மாடியிலிருந்து தூக்கி வீசி எறியப்பட்டு கொல்லப்பட்டார். இதுகுறித்து அவரது தந்தை சலேம் கூறுகையில்,

“நள்ளிரவு 12.30 அளவில் நான்கு பேர் கொண்ட கும்பல் எங்கள் வீட்டிற்கு வந்தது. வந்தவர்கள் ஆம்டா காவல்நிலையத்திலிருந்து வருகிறோம் என கூறினார்கள். காவல்துறை சீருடை அணிந்த நால்வரில் ஒருவர் என்னுடன் தரைத்தளத்தில் இருந்தார். மற்ற மூவர் எனது மகனிடம் பேசவேண்டும் என கூறி மாடிக்கு அழைத்து சென்றனர். என்னுடன் நின்றவர் துப்பாக்கியை கையில் வைத்திருந்தார்.

`

சிறிது நேரம் கழித்து மிகப்பெரிய அலறல் சத்தத்தை கேட்டேன். அப்போது வாசலில் ரத்தவெள்ளத்தில் எனது மகன் பிணமாக கிடந்தான். நான் கூச்சலிடவே அனைவரும் தப்பியோடிவிட்டனர்” என கூறினார். இதுகுறித்து பேசிய காவல்துறையினர் நாங்கள் எந்த ஒரு காவல்துறை அதிகாரிகளையும் விசாரணைக்காக அனுப்பவில்லை. உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பியுள்ளோம் என கூறினர்.

மாணவரின் கொலையை தொடர்ந்து அலியா பல்கலைக்கழக மாணவர்கள் கொல்கத்தாவின் முக்கியசாலைகளில் போராட்டம் நடத்திவருகின்றனர். போலீசார் தடியடி நடத்தி அவர்களை அப்புறப்படுத்தி வருகின்றனர்.

```
```

மேலும் மாநில அமைச்சர் பிர்ஹாத் ஹக்கீம் கூறுகையில் இந்த கொலைக்கு பின்னால் ஏதாவது சதி இருக்கலாம். தாக்குதல் நடத்தியவர்கள் வெளிமாநிலத்திலிருந்து வந்திருக்கலாம்” என தெரிவித்தார்.

…..உங்கள் பீமா