Thursday, May 2, 2024
Home > செய்திகள் > மாவட்ட ஆட்சியர் நியமனம்..! போராட்டத்தில் குதித்த இஸ்லாமிய அமைப்பு..!!

மாவட்ட ஆட்சியர் நியமனம்..! போராட்டத்தில் குதித்த இஸ்லாமிய அமைப்பு..!!

alapuzha muslim jamaat protest

கேரளா : கேரள இஸ்லாமிய ஜமாத்தின் தாய் அமைப்பான AP சமஸ்தா பிரிவால் நடத்தப்படும் சிராஜ் நாளிதழின் பீரோ தலைவராக இருந்தவர் கே.எம்.பஷீர். இவர் 2019ஆம் ஆண்டு நடந்த ஒரு வாகனவிபத்தில் மரணமடைந்தார். அவரை வாகனம் ஏற்றி கொலை செய்ததாக ஐ.ஏ.எஸ் அதிகாரி ஸ்ரீராம் வெங்கடராமன் மீது வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது.



இந்நிலையில் ஸ்ரீராம் வெங்கடராமன் ஆலப்புழா மாவட்ட ஆட்சியராக கடந்த வாரம் நியமிக்கப்பட்டார். அவரது நியமனத்தை எதிர்த்து கேரளா முழுவதும் கேரளா முஸ்லீம் ஜமாத் சார்பாக பேரணி நடைபெற்றது. நேற்று இத பேரணியை மாநில செயலாளர் மஜித் காக்காய் கேரள மாநில தலைமை செயலகம் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களிலும் பேரணியை தொடங்கி வைத்தார்.

`

தற்போது மாநில சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை இணைச்செயலாளராக பணியாற்றி வந்த வெங்கடராமன் கடந்த ஜூலை 26 அன்று ஆலப்புழா மாவட்ட ஆட்சியராக பணியமர்த்தப்பட்டார். கடந்த 2019ல் மது அருந்திவிட்டு வாகனம் ஒட்டியது பத்திரிகையாளரை வாகனம் ஏற்றி கொலை செய்தது மற்றும் ஆதாரங்களை மாற்றியது என அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்கள் அவர் மெது கூறப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

FOR BUSINESS LISTING http://www.tsimart.com   7338816562

```
```

மேலும் ஆட்சியருக்கு எதிராக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் காங்கிரசார் ஆலப்புழா மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தினர். மேலும் மாவட்ட ஆட்சியர் வெங்கடராமன் நியமனத்தை ரத்து செய்யுமாறு இந்திய கலாச்சார மன்றமான ICF அமைப்பும் நேற்று மாநிலம் முழுவதும் எதிர்ப்பு பேரணிகளை நடத்தியது.