Monday, May 20, 2024
Home > செய்திகள் > மெல்ட்டிங் பாய்ண்டிலும் உருகாத ஊசி..! கன்னியாகுமரியில் அதிசயம்..!

மெல்ட்டிங் பாய்ண்டிலும் உருகாத ஊசி..! கன்னியாகுமரியில் அதிசயம்..!

15-1-22/10.25am

கன்னியாகுமரி : முதல்வர் முக ஸ்டாலின் தாரக மந்திரமாக சொன்னதை செய்வோம் செய்வதை சொல்வோம் என தேர்தலுக்குமுன் சூளுரைத்தார். மேலும் ஒவ்வொரு கிராமசபை கூட்டத்திலும் வாக்குறுதிப்பெட்டி ஒன்றை அமைத்து அதில் தங்கள் குறைகளுக்கான மனுவை போடுமாறு கேட்டுக்கொண்டார்.

முதல்வராக பதவியேற்ற ஸ்டாலின் அதன்பிறகு அந்த புகார் பற்றிய பேச்சையே எடுக்கவில்லை. மேலும் நேற்று முன்தினம் எட்டுமாதத்தில் கையெழுத்திட்ட திட்டங்கள் என வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அந்த திட்டங்களில் பல ஏற்கனவே நடைமுறையிலிருப்பதாகவும் பாதிக்கு மேலான திட்டங்கள் மத்திய அரசால் நடைமுறைப்படுத்தப்பட்டு இருப்பதாகவும் பிஜேபியினர் விமர்சித்து வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த அதிமுக ஆட்சியில் ஏழைஎளிய மக்களுக்கு வழங்கப்பட்ட பொங்கல் தொகுப்பில் 2500 ரூபாய் ரொக்கப்பணம் கொடுக்கப்பட்டு வந்தது. அந்த ரொக்கப்பணத்தை நிறுத்திய முதல்வர் பொங்கல் தொகுப்புக்களை வாங்க வீட்டிலிருந்து பைகளை கொண்டுவருமாறு கோரிக்கை வைத்தார். இந்நிலையில் பொங்கல் தொகுப்பில் கொடுக்கப்பட்ட புளியில் பல்லி இருந்து அந்த வழக்கில் ஒரு குடும்பமே நிலைகுலைந்து ஒரு உயிர் பறிபோனது.

`

இந்த அதிர்ச்சி மறைவதற்கு முன்னர் கன்னியாகுமரி மாவட்டம் மெதுகும்மல் ஊராட்சிக்கு உட்பட்ட நியாயவிலைக்கடையில் பயனாளி ஒருவருக்கு வழங்கப்பட்ட வெல்லத்தில் சிரிஞ்சு ஒன்று கண்டெடுக்கப்பட்டிருக்கிறது. இதுகுறித்த வீடியோ வெளியிட்டவரை போலீஸ் எப்போது கைது செய்யுமோ என அச்சம் நிலவும் நிலையில் அடுத்த அதிர்ச்சி வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

போளூர் தாலுகா சதுப்பேரி கிராமத்தில் பயனாளி ஒருவருக்கு நியாயவிலைக்கடையில் பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டிருக்கிறது. அந்த தொகுப்பில் உள்ள வெல்லத்தை வீட்டில் சென்று பார்த்தபொழுது அதில் மஞ்சப்பை ஒன்று இருந்ததை கண்டு பயனாளி அதிர்ச்சியில் உறைந்துள்ளார்.

```
```

இரண்டு பயனாளிகள் மட்டுமல்லாமல் பலர் இந்த அதிர்ச்சிக்கு ஆளானதாகவும் வீடியோக்களை வெளியிட பயமாக இருப்பதாகவும் பொதுமக்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

…..உங்கள் பீமா