Sunday, May 12, 2024
Home > செய்திகள் > சேலத்து மாம்பழம் இனி அமெரிக்காவிலும்…!

சேலத்து மாம்பழம் இனி அமெரிக்காவிலும்…!

8-1-22/19.30pm

டெல்லி : பிரதமர் மோடி நாட்டின் உட்கட்டமைப்புக்கு கொடுக்கின்ற முக்கியத்துவத்தை போல வேளாண்துறை வளர்ச்சியிலும் தனது கவனத்தை செலுத்துகிறார். இந்தியா முழுவதும் உள்ள விவசாயிகளின் மேம்பாட்டிற்காக பல திட்டங்களை அறிவித்துள்ளார்.

சமீபத்தில் கூட 20000 கோடி நிதி வேளாண் விவசாயிகளின் வங்கிக்கணக்கிற்கு நேரடியாக செலுத்தப்பட்டது. மேலும் விவசாயிகள் பயிர்காப்பீட்டு திட்டம் முதலியன நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. மத்திய அரசின் இன்னொரு மைல்கல்லாக இந்தியாவில் விளையும் மாம்பழங்கள் மற்றும் மாதுளைகளை அமெரிக்காவில் சந்தைப்படுத்த மத்திய அரசு கடந்த வருடம் அமெரிக்க அரசுடன் ஒப்பந்தம் ஒன்றை போட்டிருந்தது.

இனி தமிழகத்தில் உள்ள சேலம் பகுதியில் விளையும் மாங்கனிகளை அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்ய இந்த ஒப்பந்தம் வழிவகுக்கிறது. இதுகுறித்து மத்திய வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் “2021 நவம்பர் 23 அன்று நடைபெற்ற இந்தியா – அமெரிக்கா இடையேயான 12-வது வர்த்தகக் கொள்கை அமைப்பின் கூட்டத்தைத் தொடர்ந்து இந்தியாவின் வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறைக்கும் அமெரிக்காவின் வேளாண் துறைக்கும் இடையே கட்டமைப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது.

`

இதைத் தொடர்ந்து 2022 ஜனவரி-பிப்ரவரி மாதங்களிலிருந்து அமெரிக்காவிற்கு மாம்பழங்கள் ஏற்றுமதி தொடங்கும். 2022 ஏப்ரல் முதல் மாதுளை ஏற்றுமதி செய்யப்படும். இதற்கு இணையாக அமெரிக்காவிலிருந்து செர்ரி பழங்கள் மற்றும் அல்ஃபால்ஃபா கால்நடை தீவனம் 2022 ஏப்ரல் முதல் ஏற்றுமதியாகும். இத்துடன் அமெரிக்காவின் பன்றி இறைச்சிக்கு சந்தை வாய்ப்பு வழங்க தயார் என இந்தியாவின் கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமெரிக்காவிடம் தெரிவித்துள்ளது. இதனை இறுதிப்படுத்த கையெழுத்திடப்பட்ட தூய்மைச் சான்றிதழைப் பகிருமாறு கோரப்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளது.

உலக அளவில் பழங்கள் ஏற்றுமதியில் இந்தியா இரண்டாவது இடத்தை பிடித்திருக்கிறது. மாதுளை உற்பத்தியில் இந்தியாவில் முதல் மாநிலமாக மஹாராஷ்டிரா திகழ்கிறது. கர்நாடகா தமிழ்நாடு குஜராத் ஆந்திரா ராஜஸ்தான் மற்றும் மத்திய பிரதேசங்களில் மாதுளை அதிக அளவில் பயிரிடப்படுகிறது. அதே போல மாம்பழம் பயிரிடுதலில் உத்திரபிரதேசம் ஆந்திரா கர்நாடகா ஆகிய மாநிலங்கள் மொத்த உற்பத்தியில் முன்னிலை வகிக்கின்றன. தமிழகம் கர்நாடகா கேரளா பிஹார் ஆகிய மாநிலங்களிலும் அதிக அளவில் மாம்பழங்கள் பயிரிடப்படுகின்றன.

```
```

உலக அளவில் உத்திரபிரதேச மாம்பழங்களுக்கு இருக்கின்ற அதே மவுசு தமிழகத்தில் விளையும் மாம்பழங்களுக்கு இருக்கிறது என்பது கண்கூடு. இந்நிலையில் மத்திய மோடி அரசின் இந்த ஒப்பந்தம் விவசாயிகளுக்கு பெரும் மகிழ்ச்சியை கொடுத்திருக்கிறது. இதனிடையே இந்த முன்னெடுப்பிலும் திமுக அரசு ஸ்டிக்கர் ஒட்டிக்கொள்ளுமா என பிஜேபியினர் விமர்சித்து வருகின்றனர்.

……உங்கள் பீமா