Wednesday, March 19, 2025
Home > செய்திகள் > இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் எச்சரிக்கை..! அஜித் தோவலுக்கேவா..!

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் எச்சரிக்கை..! அஜித் தோவலுக்கேவா..!

9-11-21/ 11.36am

டெல்லி : இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் அரிந்தம் பாக்க்ஷி ஒரு எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

சமீபத்தில் ராஜ்பவன் ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தது. அதில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள் பெயரில் போலி இமெயில்களும் இணையதள கணக்குகளும் போலியாக இயங்குவதாக அறிவித்தது. அதையடுத்தது தமிழக ஆளுநரின் அதிகாரபூர்வ கணக்கையும் அதிகாரபூர்வமாக வெளியிட்டு குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தது.

`

அதே போல இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகரான அஜித் தோவல் பெயரில் சில போலியான ட்விட்டர் அக்கவுண்ட்டுகள் வலம் வருகின்றன. அதிலும் அஜித் தோவல் பெயரில் ப்ளூ டிக் வெரிபைட் ஆன கணக்குகளும் உலா வருகின்றன. ட்விட்டர் பயன்படுத்தும் பலரும் அது தான் உண்மையான கணக்கு என பின்தொடர்வதும் பல விஷயங்களுக்கு டேக் செய்வதும் வாடிக்கையாக இருந்துள்ளது.

```
```

இந்நிலையில் நேற்று வெளியுறவுத்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் அரிந்தம் பாக்க்ஷி ஒரு எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில் ” தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் பெயரில் எந்த ட்விட்டர் கணக்கும் இல்லை. இதனால் அஜித் தோவல் பெயரில் உள்ள போலியான கணக்குகளிடம் கவனமாக இருங்கள்” என தெரிவித்துள்ளார்.

https://twitter.com/TheAjitDovalNSA/status/1428726645771300869?s=20

……….உங்கள் பீமா