Monday, May 20, 2024
Home > செய்திகள் > போலீசார் மீது தாக்குதல்..!? திமுகவினர் கைது..!

போலீசார் மீது தாக்குதல்..!? திமுகவினர் கைது..!

16-01-22/11.10am

சென்னை : இருபிரிவினருக்கிடையே நடந்த தகராறில் விசாரணைக்கு வந்த போலீசார் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதையடுத்து திமுகவினர் எட்டுபேரை போலீசார் கைது செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

எண்ணூர் அருகே நெட்டுக்குப்பம் பகுதியில் நடந்த பொங்கல் விழாவில் இரு தரப்பினருக்கிடையே கைகலப்பு ஏற்பட்டு கலவரம் வெடித்ததாக தெரிகிறது. தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அங்கு பிரச்சினையில் ஈடுபட்ட சிலரை போலீசார் கைது செய்தனர்.

`

அப்போது அங்கே வந்த திமுகவை சேர்ந்த தொ.மு.ச தொழிற்சங்க திமுக பிரமுகர் இளங்கோவன் மற்றும் மாவட்ட திமுக மீனவ இளைஞரணி துணை அமைப்பாளர் மகேந்திரன் மற்றும் ஹரிஷ் ஆகியோர் கைகலப்பில் ஈடுபட்டவர்களை கைதுசெய்ய விடாமல் போலீசாரை தடுத்ததாக தெரிகிறது. அப்போது தடுக்க வந்த போலீசாரை திமுகவினர் தாக்கியதாக கூறப்படுகிறது.

```
```

அதையடுத்து போலீசார் திமுகவை சேர்ந்த எட்டு பேரை கைது செய்து எண்ணூர் காவல்நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

…..உங்கள் பீமா