16-11-21/ 15.52
சிதம்பரம்: இந்து அமைப்பினர் பிஜேபி மற்றும் பொதுமக்களின் போராட்டத்தால் சிதம்பரம் கோவில்களை இடிக்கும் முடிவை அரசு ஒத்திவைத்துள்ளது.
சிதம்பரம் கீழவீதியில் அமைந்திருக்கும் வீர ஆஞ்சநேயர் திருக்கோவில் மற்றும் தேர் அருகே அமைந்துள்ள தான்தோன்றி விநாயகர் கோவில் ஆகிய இரண்டு கோவில்களும் 17-11-21 அன்று தகர்க்கப்பட போவதாக நெடுஞ்சாலைத்துறை அறிவித்திருந்தது. இந்து மக்கள் கட்சி அர்ஜுன் சம்பத் மாபெரும் போராட்டம் வெடிக்கும் என அறிவித்திருந்தார்.
இந்நிலையில் விஸ்வ ஹிந்து பரிஷத் இந்து மஹா சபா மற்றும் இந்து முன்னணி மற்றும் பிஜேபி தொண்டர்கள் சிதம்பரம் நகரில் பொதுமக்களுடன் இணைந்து எதிர்ப்புக் குரல் கொடுக்க ஆரம்பித்தனர். நிலைமையின் விபரீதத்தை உணர்ந்து கொண்ட அரசு மற்றும் நெடுஞ்சாலைத்துறை மற்றும் காவல்துறை பொதுமக்கள் மற்றும் இந்து அமைப்புகளிடம் பேச்சுவார்த்தை நடத்த கோரிக்கை விடுத்தன.
அதையடுத்து இன்று காலை 10 மணியளவில் சிதம்பரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் தலைமையில் அமைதி பேச்சுவார்த்தை நடந்தது. அதில் நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்டப்பொறியாளர் நகர காவல் ஆய்வாளர் மற்றும் இரண்டு கோவில் நிர்வாகிகள், பிஜேபி இந்து மஹா சபா இந்து மக்கள் கட்சி இந்துமுன்னணி மற்றும் பொதுமக்கள் உட்பட 15 பேர் கலந்துகொண்டனர்.
இந்த கூட்டத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சினையை கருத்தில் கொண்டு ஒன்பது மாத கால அவகாசம் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. மேலும் 16-11-21 மற்றும் 17-11-21 இரண்டுநாட்கள் நடைபெற இருந்த போராட்டம் கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்துக்களின் ஒற்றுமை மற்றும் இந்து அமைப்புகளின் போராட்டம் வென்றுவிட்டதாக மக்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
….உங்கள் பீமா