Monday, April 29, 2024
Home > அரசியல் > புல்டோசர் மட்டுமே வழி..! ஆட்டம் காட்டும் ஆதித்யநாத்..!

புல்டோசர் மட்டுமே வழி..! ஆட்டம் காட்டும் ஆதித்யநாத்..!

30-1-22/10.40am

உத்திரபிரதேசம் : பாகபத் பகுதியில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய முதல்வர் யோகி ஆதித்யநாத் சமாஜ்வாடி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர்களை கடுமையாக விமர்சித்தார். அதற்குமுன்னர் யோகியை குற்றவாளி என அகிலேஷ் யாதவ் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

கடந்த வெள்ளிக்கிழமை அகிலேஷ் யாதவ் மீரட்டில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசுகையில் “அதிக கிரிமினல் வழக்குகளை கொண்டவர் முதல்வர். இவரின் ஆட்சியிலேயே குற்றங்கள் அதிகரித்துள்ளன. சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. சிறைவளாகத்திற்குள்ளேயே கொலை சம்பவங்கள் நடைபெறுகின்றன. இதுவரை யோகி மீது வழக்குகள் பதியப்பட்டுள்ளனவா. மக்கள் அனைத்தையும் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். எங்களை தாமஞ்சாவடி என குறிப்பிட்டிருக்கிறார். யோகி தான் தாமஞ்சாவடி” என கூறினார்.

பாக்பத் பகுதியில் சனிக்கிழமை நடந்த ஒரு பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட முதல்வர் யோகி ஆதித்யநாத் “மாநிலத்தில் ராமராஜ்ஜியம் நடைபெற்று வருகிறது. மக்களை மதரீதியாக பிரிக்காமல் அனைவரும் சமம் என்கிற தாரக மந்திரத்தோடு எனது அரசு செயல்பட்டு வருகிறது. 2013ல் முசாபார் நகரில் நடத்தப்பட்ட கலவரம் யாரால் எதற்கு நடத்தப்பட்டது என உத்திரபிரதேச மக்கள் அறிவார்கள்.

`

சமாஜ்வாடி அணிந்திருக்கும் தொப்பி அப்பாவி ராமபக்தர்களின் ரத்தத்தால் சிகப்பாக மாறியுள்ளது. குற்றவாளிகளுக்கு தேர்தல் சீட்டு கொடுப்பதில் சமாஜ்வாடி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சியினரிடையே பெரும் போட்டி நிலவி வருகிறது. அவர்கள் எம்.எல்.ஏவாகவோ எம்பியாகவோ தேர்ந்தெடுக்கப்பட்டால் துப்பாக்கி தயாரிப்பார்களே தவிர மலர்களை உற்பத்தி செய்யப்பபோவதில்லை.

```
```

இத்தகைய கிரிமினல்களுக்கு புல்டோசர் ஒன்றே வழி. எஸ்பி ஆட்சிக்காலத்தில் வாரத்தில் மூன்று நாட்கள் கலவரம் நடக்கும். இப்போது ஐந்து ஆண்டுகளாக ஒரு கலவரம் இல்லை. மாநில வளர்ச்சித்திட்டங்களில் முழுக்க கவனம் செலுத்தி மாநிலத்தை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்வது எங்கள் அரசு.” என பதிலடியாக பேசியுள்ளார் முதல்வர் யோகி ஆதித்யநாத்.

…..உங்கள் பீமா