Monday, May 20, 2024
Home > செய்திகள் > ஜகா வாங்கிய திண்டுக்கல் லியோனி..! ஜெர்க் கொடுத்த பிஜேபி..!

ஜகா வாங்கிய திண்டுக்கல் லியோனி..! ஜெர்க் கொடுத்த பிஜேபி..!

சென்னை : திமுகவுக்கென ஒரு பாரம்பரியம் உண்டு என அதன் தலைவர்கள் மார்தட்டி சொல்வதுண்டு. ஆனால் ஆபாசகருத்துக்கள் மற்றும் தனிநபர் தாக்குதலே திமுகவின் பாரம்பரியம் என்று அதிமுக பிஜேபி போன்ற எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன.



`

திமுக அமைப்பு செயலாளர் ஆன ஆர்.எஸ் பாரதி நீதிபதிகளையே நாங்கள் போட்ட பிச்சை என்று கூறியிருந்தார். ஊடகங்களை ரெட் லைட் என கூறியதுடன் தலித் மக்களை கடுமையான முறையில் விமர்சித்திருந்தார். இவரைப்போலவே இன்னொரு பேச்சாளர் முன்னாள் முதல்வர் மறைந்த செல்வி ஜெயலலிதா அவர்களை தரக்குறைவாக ஆபாச வார்த்தைகளில் பேசியிருந்தார்.

```
```

இப்படி பாரம்பரியமிக்க கட்சியில் தன்னை இணைத்துக்கொண்ட பட்டிமன்ற பேச்சாளர் திண்டுக்கல் லியோனி கடந்த சட்டமன்றத்தேர்தல் பரப்புரையின்போது பெண்களின் இடுப்பு ட்ரம் போல இருக்கிறது என வர்ணித்திருந்தார். அதில் தொடங்கிய அவரது வர்ணனை தற்போதுவரை குறையவில்லை.

இந்நிலையில் சென்னையை அடுத்த பொன்னேரியில் கடந்த 19ம் தேதி திமுக அரசின் ஓராண்டு சாதனைகள் குறித்த விளக்க கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய லியோனி ” ஒருகாலத்தில் செருப்பை தலையில் தூக்கிவைத்துக்கொண்டிருந்த சமுதாயத்தை சேர்ந்தவரை இன்று மாண்புமிகு மேயர் அவர்களே என முதல்வர் ஸ்டாலின் அழைக்கவைத்துள்ளார்” என மேயர் ப்ரியாவின் சாதிகுறித்து அவதூறாக பேசினார்.



இதைத்தொடர்ந்து லியோனின் பேச்சுக்கு பலத்த கண்டனங்கள் எழுந்தன. மேயரை சாதிரீதியாக இழிவுபடுத்தியதாக பிஜேபி விமர்சனம் செய்தது. மேலும் தமிழக பிஜேபி பட்டியலின அணியின் மாநில செயலாளர் நாகராஜ் நேற்று லியோனி மீதுசென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகாரளித்துள்ளார்.
அதையடுத்து நான் அந்த அர்த்தத்தில் சொல்லவில்லை. எந்த உள்நோக்கமும் இல்லை என கதறிவருகிறார் திண்டுக்கல் திமுக லியோனி.