Monday, May 20, 2024
Home > அரசியல் > தீர்மானத்தை நிறைவேற்றிய முதல்வர்..! பிஜேபி எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு

தீர்மானத்தை நிறைவேற்றிய முதல்வர்..! பிஜேபி எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு

11-4-22/12.22PM

சென்னை : மத்திய பல்கலைக்கழகங்களில் இளங்களைப்படிப்புகளுக்கான பொதுநுழைவுத் தேர்வினை நடத்துவதற்கு எதிரான தீர்மானத்தை முக.ஸ்டாலின் முன்மொழிந்தார்.

முக.ஸ்டாலின் சட்டசபையில் ” மத்திய அரசின் நிதியுதவியுடன் இயங்கும் அனைத்து மத்திய பல்கலைக்கழகங்களிலும் 2022-23 கல்வியாண்டு முதல் நுழைவுத்தேர்வு நடத்தப்படும் என்றும் மாநில பல்கலைக்கழகங்கள் மற்றும் நிகர்நிலைப்பல்கலைக்கழகங்களும் மாணவர்சேர்க்கைக்கு இந்த மதிப்பெண்களை பயன்படுத்திக்கொள்ளலாம் என பீடிகை போட்டு பல்கலைக்கழக மானியக்குழு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

`
FASTNEWS: 9ம் வகுப்பு மாணவி கூட்டு பாலியல் பலாத்காரம். திரிணாமூல் கட்சி பிரமுகரின் மகன் கைது. நாடியா மாவட்டத்தை சேர்ந்த அந்த சிறுமி இரத்தப்போக்கால் மரணம்.

பிளஸ் 2 மதிப்பெண்களை கணக்கில்கொள்ளாமல் நுழைவுத்தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் சேர்க்கை என்பது ஏற்புடையதல்ல.அனைத்து மாணவர்களுக்கும் இது சமவாய்பினை வழங்காது. தமிழகத்தில் எழுபது சதவிகித மாணவர்கள் மாநில பாடத்திட்டங்களில் பயின்று வருகின்றனர். அவ்ராஜ்ம் பெரும்பாலும் விளிம்புநிலையை சேர்ந்தவர்கள். இந்த தேர்வுமுறை அவர்களுக்கு பாதகத்தை ஏற்படுத்தும். இதனால் பல்கலைக்கழகங்களில் தமிழக மாணவர்களின் எண்ணிக்கை குறையும்.

```
```

நீட் தேர்வைபோல மாணவர்கள் பயிற்சிமையங்களை சார்ந்திருக்கும் சூழலுக்கு தள்ளப்படுவார்கள். ஆகவே மத்திய அரசின் கீழ் இயங்கும் பல்கலைக்கழக மானியக்குழு இந்தமுடிவை கைவிடவேண்டும்” என கூறினார்.
இந்த தீர்மானத்தை எதிர்த்து பிஜேபி எம்.எல்.ஏக்கள் சட்டசபையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.

…..உங்கள் பீமா