Sunday, May 12, 2024
Home > அரசியல் > இது வேற லெவல் அரசியல்..! தட்டி தூக்கிய தமிழக பிஜேபி தலைவர் அண்ணாமலை..!

இது வேற லெவல் அரசியல்..! தட்டி தூக்கிய தமிழக பிஜேபி தலைவர் அண்ணாமலை..!

27-11-21/19.20 pm

நாகப்பட்டினம் : வெற்று அறிக்கைகள் மட்டுமே மத்தியில் விடும் திரவிட கட்சிகளுக்கு மத்தியில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் செயல்பாட்டு அரசியல் வேறுவிதமாக அமைந்திருக்கிறது என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

கடந்த காங்கிரஸ் ஆட்சியில் மாதம் தோறும் தவறாமல் தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கொல்லப்படுவதும் சிறைபிடிக்கப்படுவதும் அன்றாட நிகழ்வாய் இருந்தது. 2014 நரேந்திர மோடி தலைமையிலான அரசு மத்தியில் ஆட்சிப்பொறுப்பேற்றதும் மீனவர்களின் பிரச்சினை முடிவுக்கு வந்தது. திமுக மீனவர் பிரச்சினைக்கு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்க மறுத்தது.

தனது கூட்டணிக் கட்சியான காங்கிரசை குளிர்விக்கும் வேலையில் ஈடுபட்டு காகிதத்தில் இருந்து அறிக்கை மட்டுமே வெளியிடப்பட்டது. அந்த தோழமை கட்சிகளான விசிக மதிமுக போன்ற கட்சிகளும் அறிக்கை வெளியிட தவறுவதில்லை. ஆனால் செயல்பாடுகள் மீனவருக்கு எதிராகவே இருந்ததாக எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.

`

இந்நிலையில் தமிழக மீனவர்கள் 23 பேரை இலங்கை கடற்படையினர் கடந்த அக்.13ஆம் தேதி சிறைப்பிடித்தனர். மீனவர்கள் குடும்பம் பலமுறை முதல்வரிடம் மனு கொடுத்தும் பயனில்லாமல் போகவே தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை சந்தித்ததாக கூறப்படுகிறது. அதையடுத்து அண்ணாமலையின் சீரிய முயற்சியால் மத்திய அமைச்சர் ஜெயசங்கர் வரை மீனவர் பிரச்சினை கொண்டு செல்லப்பட்டது.

அதன்பின்னர் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் இலங்கை அரசை தொடர்பு கொண்டு மீனவர்களை விடுவிக்க நடவடிக்கைகள் எடுத்தது. அதன்பலனாக இன்று 23 மீனவர்களும் பத்திரமாக வீடு திரும்பினர். இதுகுறித்து அண்ணாமலை தனது அறிக்கையில்” நாகப்பட்டணம் அக்கரைப்பேட்டை சார்ந்த நமது 23 மீனவ சகோதரர்கள், இலங்கை கடற்படையால் அக்டோபர் 13-ஆம் தேதி கைது செய்யப்பட்டனர்.

```
```

நம்முடைய மத்திய அரசினுடைய சீரிய முயற்சியால் அனைவரும் விடுவிக்கப்பட்டு இன்று காலை 18 சகோதரர்கள் சென்னை வந்து அடைந்திருக்கிறார்கள் மீதம் 5 சகோதரர்கள் Covid காரணமாக தனிமைப்படுத்தப்பட்டு இருக்கிறார்கள். மீனவர் அணி, தலைவர் சதீஷ் அவர்கள் இன்று காலை அவர்களை சென்னை விமான நிலையத்தில் வரவேற்று அழைத்து வந்தார்கள். எப்போதும் மீனவ சமுதாயத்திற்காக இருக்கும் அரசு நம்முடைய நரேந்திர மோடி அவர்கள் அரசு” என தெரிவித்துள்ளார்.

மேலும் மீனவ அமைப்பினர் மற்றும் விடுவிக்கப்பட்ட மீனவர்களின் குடும்பங்கள் தமிழக தலைவர் அண்ணாமலைக்கு வாழ்த்துக்களும் நன்றிகளும் தெரிவித்து வருகின்றனர்.

….உங்கள் பீமா