Sunday, May 12, 2024
Home > செய்திகள் > கோவில்களுக்கு ஜிஸியா வரிவிதிப்பா..? பிஜேபி கடும் கண்டனம்..!

கோவில்களுக்கு ஜிஸியா வரிவிதிப்பா..? பிஜேபி கடும் கண்டனம்..!

2-12-21/6.10am

இந்தியா : கோவில்களுக்கு மாநில அரசு மொகலாயர்கள் போல ஜிசியா வரி விதிப்பதா என இந்து அமைப்புகள் மற்றும் பிஜேபி தலைவர்கள் கடும் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர்.

பிஹார் மாநிலத்தில் உள்ள கோவில்கள் அனைத்தும் தாமாக முன் வந்து பதிவு செய்து வரி கட்ட வேண்டும் என ஸ்டேட் போர்ட் ஆப் ரிலீஜியஸ் டிரஸ்ட் அறிவித்துள்ளது. மேலும் தனியார் அமைப்பு மூலமாக கட்டப்பட்டு பொதுமக்கள் வழிபட அனுமதிக்கப்பட்டுள்ள கோவில்களும் இந்த வரைமுறைக்கு உட்பட்டது றன அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்பால் பிஹார் மாநிலத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. செய்தித்தாள்களில் வெளிவந்துள்ள செய்திகளின் படி தனிப்பட்ட நபரின் வீட்டில் அமைந்திருக்கும் கோவிலாக இருந்தாலும் அது பொதுமக்களின் வழிபாட்டுக்கு அனுமதிக்கப்பட்டிருந்தால் பொது கோவில்கள் போல அந்த கோவில்களும் மாநில ஸ்டேட் போர்டுக்கு நான்கு சதவிகித வரியை செலுத்த வேண்டும். தவறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்திருப்பதாக தெரிவிக்கிறது.

`

இதுகுறித்து பேசிய ஸ்ரீ ராமஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா டிரஸ்ட் உறுப்பினரான காமேஸ்வர் ” மொகலாய அரசர்கள் முஸ்லிம்கள் அல்லாதோர் மீது ஜிஸியா வரி விதித்தனர். 1579ல் அக்பர் வரிவிதிப்பை நிறுத்தினார். ஆனால் அவுரங்கசிப் 1679ல் மீண்டும் ஜிஸியா வரிவிதிப்பை கொண்டுவந்தான். அதே போல பிஹார் அரசும் இந்துக்கள் மீது வரிவிதிப்பை நிகழ்த்துகிறது” என குறிப்பிட்டார்.

```
```

பிஜேபி செய்தி தொடர்பாளரான சஞ்சய் மயூக் மற்றும் பிஜேபி சட்டமன்ற உறுப்பினரான லாலன் பஸ்வான் ஆகியோர் இதற்க்கு கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளனர்.

….உங்கள் பீமா