ஜெயிலர் படத்தின் அட்டகாசமான முதல் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.
அண்ணாத்த படத்தின் தோல்விக்குப் பிறகு ரஜினிகாந்த் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். பீஸ்ட் படத்தின் தோல்விக்குப் பிறகு இந்த படத்தை நெல்சன் இயக்கி வருகிறார். நெல்சனின் ஆஸ்தான இசையமைப்பாளரான அனிருத் இந்த படத்துக்கும் இசையமைக்கிறார். இந்த படத்தில் ரம்யா கிருஷ்ணன், தமன்னா, வசந்த் ரவி மற்றும் யோகி பாபு ஆகியோர் நடிக்கின்றனர்.
வரிசையாக ரஜினி படங்கள் எதிர்பார்த்த வெற்றியைப் பெறாத நிலையில் இந்த படத்தின் பட்ஜெட் கணிசமாக குறைக்கப்பட்டுள்ளது. அதுபோல ரஜினியின் சம்பளமும் குறைக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.
இப்போது விறுவிறுப்பாக ஜெயிலர் படத்தின் ஷூட்டிங் நடந்து வரும் நிலையில் ரஜினி சம்மந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இதுவரையில் 50 சதவீதத்துக்கும் மேலான காட்சிகள் படமாக்கப்பட்டு விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்தளவுக்கு வேகமாக நெல்சன் காட்சிகளை படமாக்க, படக்குழுவுக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்து வருகிறாராம் ரஜினி.
இந்நிலையில் இன்று ரஜினியின் பிறந்தநாள் கொண்டாடப்படுவதை அடுத்து நள்ளிரவில் ஜெயிலர் படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டது. அதில் ரஜினியின் கதாபாத்திரம் ‘முத்துவேல் பாண்டியன்’ என்ற பெயரில் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. மேலும் இன்று மாலை அடுத்த அப்டேட் வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.