17-3-22/11.00am
புதுதில்லி : அகஸ்ட்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்தில் விவிஐபிக்களுக்கான ஹெலிகாப்டர் வாங்கப்பட்டதில் 2006-2007ல் இடைத்தரகர்கள் மூல காங்கிரஸ் ஆட்சியில் 2.5 பில்லியன் டாலர் ஊழல் நடந்திருப்பது வெளிச்சத்துக்கு வந்து நாட்டையே உலுக்கியிருந்தது.

இந்த ஊழலில் காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் ராணுவ அதிகாரிகள் லஞ்சம் பெற்றிருப்பதாக குற்றம் சாட்டப்பட்டனர். அதிலும் முக்கியமாக சோனியாவின் வலதுகரமாக விளங்கிய அஹமதுபடேல் லஞ்சம் வாங்கியதாக இத்தாலி வழக்கறிஞர்களால் ஆதாரத்துடன் எடுத்துரைக்கப்பட்டது. மேலும் இந்த வழக்கில் இடைத்தரகராக செயல்பட்ட கிறிஸ்டியன் மைக்கேல் என்பவர் மன்மோகன் சிங் பெயரையும் இத்தாலி நீதிமன்றத்தில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கில் பெரும்புள்ளிகளான அஹமது படேல், பிரணாப் முகர்ஜி , எம்.வீரப்பமொய்லி, ஆஸ்கர் பெர்னாண்டஸ், எம்.கே.நாராயணன் ஆகியோருக்கு தலா ஆறு மில்லியன் வழங்கப்பட்டதாகவும் கிறிஸ்டியன் குறிப்பிட்டிருந்தார். இதனிடையே அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஒப்பந்தத்தில் முன்னாள் தேசிய தணிக்கையாளர் சஷி காந்த் ஷர்மா மற்றும் ஏர் வைஸ் மார்ஷல் ஜஸ்பீர் பனேசர் ஆகியோர் மீது வழக்கு தொடர பாதுகாப்பு அமைச்சகத்தை நாடியுள்ளது சிபிஐ.

சஷி காந்த் 2003_ 2007 பாதுகாப்பு இணையமைச்சகத்தின் விமானப்பிரிவு இணை செயலாளராக இருந்தார். மேலும் 2011-13ல் பாதுகாப்பு செயலாளராகவும் 2013-17ல் தேசிய தணிக்கை அதிகாரியாக இருந்தார். இவர்களுடன் துணை தலைமை விமானி குண்டே விங் கமாண்டர் தாமஸ் மேத்யூ க்ரூப் கேப்டன் சந்தோஷ் ஆகியோர் மீதும் வழக்கு தொடர சிபிஐ அனுமதி கோரியுள்ளது. ராகுல் அண்ட் கோ இதுவரை தங்களது ஆட்சியில் நடந்த ஊழல்கள் பற்றி எந்த ஒரு கருத்தும் கூறாமல் இருப்பது மக்களிடையே பெரும் அதிருப்தியை உண்டுபண்ணியுள்ளது.
….உங்கள் பீமா