Monday, June 22, 2026
Home > செய்திகள் > பதட்டம்..! பிஜேபி பிரமுகர் படுகொலை..!

பதட்டம்..! பிஜேபி பிரமுகர் படுகொலை..!

21-4-22/1032AM

புதுதில்லி : பிஜேபி பிரமுகர் ஒருவர் நேற்றும் மாலை துப்பாக்கியால் சுடப்பட்டு கொடூரமாக இறந்தார். இதனால் அந்த பகுதியே பரபரப்புக்குள்ளானது. மேலும் நேற்று டெல்லியில் ஆக்கிரமிப்பு இடங்களை அகற்றும் பணியும் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

தேசிய தலைநகரான டெல்லியின் மயூர் விஹார் பேஸ் 3 பகுதியை சேர்ந்த பாஜக பிரமுகர் ஜூட் சவுத்ரி(42). இவர் தனது ஆதரவாளர்களுடன் தனது வீட்டின் வாசல் முன்பு நின்று பேசிக்கொண்டிருந்தார். அப்போது பைக்கில் வந்த மர்மநபர்கள் அவரை குறிவைத்து சுட ஆரம்பித்துள்ளனர். இந்த தாக்குதலில் சவுத்ரியின் தலை மற்றும் அடிவயிறு பகுதியில் துப்பாக்கி குண்டுகள் இறங்கியது.

இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே ரத்தவெள்ளத்தில் சரிந்தார். விரைந்து வந்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு நொய்டா மெட்ரோ மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஜூட் இறந்ததை உறுதிப்படுத்தினர். சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறை அங்கு வெடிக்காத காலி கேட்ரிட்ஜ்களை கைப்பற்றியுள்ளனர்.

இதுகுறித்து பேசிய துணை காவல் ஆணையர் ப்ரியங்கா காஷ்யப் கூறுகையில் “ஜூட் சௌத்திரி நேற்று இரவி 8.15 மணியளவில் மர்மநபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். சம்பவ இடத்தில் இருந்து வேற்று தோட்டாக்கள் மற்றும் சில ஆதாரங்களை போலீசார் மீட்டுள்ளனர். கொலை செவ்ய்யப்பட்டவரின் உடல் பிரேதபரிசோதனைக்கு பிறகு குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்படும்.

நேரில் கண்ட சாட்சிகள் மற்றும் சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை கொண்டு குற்றவாளிகளை தேடும் பணி நடைபெற்றுவருகிறது” என குறிப்பிட்டார். அடுத்தடுத்து பிஜேபி தலைவர்கள் மற்றும் பிரமுகர்கள் கொல்லப்படுவது பிஜேபி தொண்டர்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

….உங்கள் பீமா