Wednesday, May 20, 2026
Home > செய்திகள் > மணிஹீஸ்ட் சீரிஸை மிஞ்சிய திருட்டு..! பலே கொள்ளையர்கள்

மணிஹீஸ்ட் சீரிஸை மிஞ்சிய திருட்டு..! பலே கொள்ளையர்கள்

9-4-22/12.21PM

பிஹார் : மணி ஹீஸ்ட் எனும் பிரெஞ்சு வெப் சீரிஸில் திருடர்கள் பேங்கை கொள்ளையடிப்பது போல கதையமைப்பு வரும். அதையே மிஞ்சிவிட்டனர் பிஹார் கொள்ளையர்கள்.

பிஹார் மாநிலம் ரோக்தாஸ் மாவட்டம் அமியாவார் கிராமத்தில் கடந்த ஐந்துவருடங்களுக்கு முன்னர் அரா-சோன் கால்வாயில் 500 டன் எடையுள்ள இரும்பு பாலம் ஒன்று கால்வாயின் குறுக்கே கட்டப்பட்டிருந்தது.

இந்த பாலத்தை ஒரே இரவில் திருடர்கள் திருடிச்சென்றுள்ளனர். பகலில் இவர்கள் மும்முரமாக பாலத்தை அறுத்துக்கொண்டிருந்தபோது கிராமத்து மக்கள் அவர்களை கவனித்திருக்கின்றனர்.

திருடர்களிடம் விசாரித்தபோது அவர்கள் நீர்வளத்துறை அதிகாரிகள் என அறிமுகப்படுத்தியிருக்கின்றனர். இதை நம்பிய மக்களில் சிலர் திருடர்களுக்கு பாலத்தில் இருந்த நட்டுக்கள் போல்ட்டுக்களை கழற்ற உதவிசெய்திருக்கின்றனர். ஏதோ மராமத்து பணி என நினைத்த மக்களுக்கு காலையில் அதிர்ச்சி காத்திருந்தது.

500 டன் எடையுள்ள அந்த எக்கு பாலத்தையே களவாடி சென்றுவிட்டனர் நூதன திருடர்கள். இதில் கொடுமை என்னவெனில் பகலில் அந்த திருடர்களுக்கு உள்ளாட்சி நிர்வாகமும் பாலத்தை அகற்ற உதவிசெய்துள்ளது. பாலத்தை அகற்ற புல்டோசர் மற்றும் கேஸ் டார்ச்களை திருடர்கள் பயன்படுத்தியுள்ளனர்.

பாலம் மிகவும் பழமையானது என்பதால் அரசு அதிகாரிகள் போல நடித்து மக்களையும் உள்ளாட்சி நிர்வாகத்தையும் மராமத்துப்பணி என கூறி ஏமாற்றியுள்ளனர் திருடர்கள்.

இதுகுறித்த தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்துவந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். ஜேசிபி அருகிலுள்ள நகரில் வாடகைக்கு எடுத்துவந்திருக்கலாம் என கருதிய போலீசார் பாட்னா மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

….உங்கள் பீமா