4-4-22/11.51AM
கடலூர் : கேரளாவை போல தமிழகத்திலும் ஆர்.எஸ்.எஸ் மற்றும் பிஜேபி நிர்வாகிகள் மீது கொலைவெறித்தாக்குதல் நடத்தப்படுவது தற்போது அதிகரித்து வருவதாக பிஜேபியினர் விமர்சித்து வருகின்றனர். அதற்கேற்றாற்போல நேற்று முன்தினம் இரவு பிஜேபி நிர்வாகி கொலைவெறி தாக்குதலுக்கு ஆளானார்.
நெய்வேலி டவுன்ஷிப் இந்திராநகரில் தள்ளுவண்டி கடை வைத்து பிழைப்பு நடத்திவருபவர் செந்தில். இவரது கடைக்கு பத்துநாட்களுக்கு முன்னர் வந்த நான்கு இளைஞர்கள் அவரை மிரட்டி கல்லாவில் இருந்து 5000 ரூபாயை பறித்து சென்றனர். இதுகுறித்து செந்தில் நெய்வேலி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து கடந்த இருநாட்களுக்கு முன்பு ஒரு சிறுவர் கைதுசெய்யப்பட்டார்.

அதைத்தொடர்ந்து நேற்றுமுன்தினம் செந்தில் கடைக்கு போதையில் வந்த மூன்று இளைஞர்கள் மீண்டும் செந்திலுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். அந்த இளைஞர்கள் கஞ்சா புகைத்திருந்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தின்போது அருகே இருந்த குறிஞ்சிப்பாடியை சேர்ந்த வடக்குத்து பாபு தகராறு
செய்தவர்களை தட்டிக்கேட்டுள்ளார்.

போதையில் இருந்த சந்துரு சஞ்சய் மற்றும் அவரது கூட்டாளி ஆகியோர் மறைத்துவைத்திருந்த கொடூர ஆயுதத்தால் பாபுவை சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. அதில் வலது கை கிழிந்து தொங்கியது. மேலும் அவர்தலையில் மற்றும் உடம்பில் ஆங்காங்கே பலத்த வெட்டுக்கள் விழுந்தது. அதையடுத்து அந்த போதை கும்பல் தப்பியோடியது. ரத்தவெள்ளத்தில் சரிந்த அவரை மீட்டு காலாப்பட்டு பிம்ஸ் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.(18)சஞ்சய் (19)மற்றும் அவரது கூட்டாளிகள் மறைத்துவைத்திருந்த கொடூர ஆயுதத்தால் பாபுவை சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது.

அதில் இடது கை கிழிந்து தொங்கியது. மேலும் அவர்தலையில் மற்றும் உடம்பில் ஆங்காங்கே பலத்த வெட்டுக்கள் விழுந்தது. அதையடுத்து அந்த போதை கும்பல் தப்பியோடியது. ரத்தவெள்ளத்தில் சரிந்த அவரை மீட்டு காலாப்பட்டு பிம்ஸ் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
வடக்குத்தி பாபு கடலூர் மாவட்ட கிழக்கு ஒன்றிய ஓ.பி.சி அணி மாவட்ட செயலாளர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பாபுவை மேல்சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மரில் அனுமதித்துள்ளனர். இனி அவரது இடதுகை சரிவர இயங்காது என்றும் இனி காது கேட்காது எனவும் சொல்லப்படுகிறது. பாபுவின் நலம்பற்றி தமிழக பிஜேபி தலைவர் அண்ணாமலை தொலைபேசியில் கேட்டறிந்தார். மேலும் பிஜேபி தரப்பில் மாவட்ட எஸ்பியை சந்தித்து கயவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க கோரி வலியுறுத்தியுள்ளனர்.
……உங்கள் பீமா
