Thursday, May 21, 2026
Home > செய்திகள் > ஆர்யன்கான் போதைப்பொருள் வழக்கு..! சாட்சி மர்ம மரணம்

ஆர்யன்கான் போதைப்பொருள் வழக்கு..! சாட்சி மர்ம மரணம்

2-4-22/12.32PM

மும்பை : கடந்த அக்டோபரில் சொகுசுகப்பலில் நடத்தப்பட்ட விருந்து ஒன்றில் போதைப்பொருள் அதிக அளவில் கைமாற்றப்பட்டதாகவும் பயன்படுத்தப்பட்டதாகவும் பிரபல நடிகர் ஷாருக்கான் வாரிசான ஆர்யன்கான் உட்பட 20 பேர் கைதானார்கள்.

இதைத்தொடர்ந்து இந்த வழக்கு இந்திய அளவில் பரபரப்பாக பேசப்பட்டது. ஆர்யனை கைதுசெய்த நேர்மையான அதிகாரி சமீர் வான்கடே அரசியல்வாதிகளால் நேரடி அழுத்தத்திற்கு ஆளானார். அவரது குடும்பம் குறிவைக்கப்பட்டது. திராவிட மாடல் போல அவரது ஜாதி குறித்து அவதூறும் பரப்பப்பட்டது. அவர்மீது வழக்கும் தொடுக்கப்பட்டது. பின்னர் அவர் இடமாறுதலுக்கும் ஆளானார்.

goswi

இதற்கிடையே அவருக்கு கொலைமிரட்டலும் விடப்பட்டு மும்பை காவல்துறை ஆணையரிடம் புகாரும் அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்தவழக்கில் கைதான 20 பேரில் இருவர் மட்டும் இன்னும் காவலில் உள்ளனர். மீதி அனைவரும் ஜாமீனில் உள்ளனர். இந்நிலையில் ஆர்யன்கான் கைதின் போது 25கோடிகள் பேரம் பேசப்பட்டதாக சொல்லப்பட்டது.

இந்த பேர வழக்கில் பிரபாகர் செய்ல்என்பவர் போதைப்பொருள் தடுப்புப்பிரிவின் சாட்சியாக இருந்தார். மேலும் நார்காட்டிக்சின் நேரடி கண்காணிப்பில் கோஸ்வி எனும் பாதுகாப்பு அதிகாரியின் கட்டுப்பாட்டில் இருந்தார். இந்நிலையில் நேற்று மாலை அவர் மாரடைப்பால் இறந்ததாக கூறப்படுகிறது. செய்திகளின் அடிப்படையில் பிரபாகர் நேற்று மாலை கடும் நெஞ்சுவலியால் அவதிப்பட்டுள்ளார்.

அவரை மும்பை கட்கோபர் பகுதியிலுள்ள ராஜவாடி அரசுமருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். இந்த தகவலை பிரபாகர் செய்ல் வழக்கறிஞரான துஷார் காண்ட்ரே உறுதிப்படுத்தியுள்ளார்.

ஆர்யன் கான் வழக்கில் தொடர்புடையவர்கள் மரணம் கைதுசெய்த அதிகாரிகள் இடமாற்றம் என இந்த போதைப்பொருள் வழக்கு முடிவில்லாமல் நீண்டுகொண்டே இருப்பதாக சமூக ஆர்வலர்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.

…..உங்கள் பீமா