Sunday, June 28, 2026
Home > செய்திகள் > புலனாய்வுத்துறை கைவரிசை..? காலியாகும் பிரதமர் பதவி

புலனாய்வுத்துறை கைவரிசை..? காலியாகும் பிரதமர் பதவி

30-3-22/12.11PM

பாகிஸ்தான் : பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கு எதிராக வருகிற ஏப்ரல் 3 அன்று நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு நடத்தப்படும் என அதிகார பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.

இம்ரான் தலைமையிலான தெஹ்ரிக் இ இன்சாப் பிரதான எதிர்க்கட்சியான பாகிஸ்தான் மக்கள் கட்சியுடன் ஒப்பந்தம் செய்ததையடுத்து முக்கிய கூட்டணிக்கட்சியான முட்டாஹிதா குவாமி மூவ்மெண்ட் விலக இருப்பதாக அறிவித்துள்ளது. ஏற்கனவே பாகிஸ்தான் நாடாளுமன்ற கீழ்சபையில் இம்ரான்கான் அரசு பெரும்பான்மையை இழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

164 எம்.என்.ஏக்களுடன் (தேசிய சட்டமன்ற உறுப்பினர்கள்) பதவியிலிருந்த இம்ரான்கான் கூட்டணிக்கட்சி பிரிந்தபின் பலம் 117 ஆக குறைந்துள்ளது. எதிர்க்கட்சி இப்போது 177 உறுப்பினர்களை கொண்டுள்ளது. பாகிஸ்தானின் மொத்த சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 342. பெரும்பான்மை 172. வரப்போகும் நம்பிக்கையில்லா தீர்மான வாக்கெடுப்பில் இம்ரான்கான் பதவியிறங்குவது உறுதி என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இம்ரான் ” வெளிநாட்டு உளவுநிறுவனங்கள் மற்றும் வெளிநாட்டு நிதி மூலமாக எங்கள் அரசை கவிழ்க்க சதி நடக்கிறது. தலைமை நீதிபதி உமர் அத்தியால் பிரதமராக நான் எனது ஆதரவை தெரிவிக்கிறேன். எங்கள் மக்கள் பயன்படுத்தப்படுகிறார்கள். எந்தெந்த வழிகளில் முயற்சி நடக்கிறது என எங்களுக்கு தெரியும். நாங்கள் தேசிய நலனில் சமரசம் செய்துகொள்ளமாட்டோம்” என கூறினார்.

மேலும் சமீபத்தில் இந்திய புலனாய்வுதுறை அதிகாரிகள் பாகிஸ்தானில் ஊடுருவியிருப்பதாகவும் வான்வெளி கடல்வழி ஆகியவை மூலம் பாகிஸ்தானை இந்தியா கண்காணிக்கிறது என்றும் இம்ரான் சமீபத்தில் குற்றச்சாட்டு எழுப்பிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

….உங்கள் பீமா