29-3-22/10.10AM
கர்நாடகா : ஹலால் உணவுக்கு எதிரான போராட்டத்தை ஹிந்து அமைப்புகள் கையிலெடுத்துள்ளன. ஹிந்துக்கள் மீது ஹலால் முறையிலான உணவுகள் வலிந்து திணிக்கப்படுவதாக அமைப்புகள் குற்றம்சாட்டுகின்றன. இதனிடையே ஹிஜாப் தடை விவகாரத்தில் பி.எப்.ஐ எனும் இஸ்லாமிய அமைப்பு ஹலால் மூலம் ஈட்டிய வருமானத்தை போராட்டத்துக்கு செலவளித்ததாக புகார் எழுந்தது குறிப்பிடத்தக்கது.
ஹிந்து அமைப்பான ஜனக்ரிதி சமிதி ஹலாலுக்கு எதிரான பிரச்சாரத்தை ஆரம்பித்துள்ளது. அந்த அமைப்பின் செய்தி தொடர்பாளர் மோகன் கவுடா கூறுகையில் ” இஸ்லாமிய மரபுப்படி விற்கப்படும் இறைச்சிகள் மற்ற மத கடவுளுக்கு படைக்க இயலாது. உகாதியின் போது இறைச்சிகள் அதிகம் விற்பனையாகும். அதனால் நாங்கள் ஹலாலுக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்த இருக்கிறோம்.

இஸ்லாமிய வழக்கப்படி ஹலால் இறைச்சி முதலில் அல்லாஹ்வுக்கு படைக்கப்படும். அதே இறைச்சியை ஹிந்துக்கள் எப்படி பயன்படுத்த முடியும். இஸ்லாமியர்கள் ஒவ்வொரு முறையும் மிருகங்களை கொல்லும்போது அவைகளின் பார்வை மெக்காவை நோக்கி இருக்கும். சில பிரார்த்தனைகள் செய்யப்படும். அதே இறைச்சியை ஹிந்து கடவுள்களுக்கு படைக்க முடியாது. மிருகங்களை கொடூரமாக துன்புறுத்தி கொல்லுவது ஹிந்துத்வத்தில் ஏற்கப்படாத ஒன்று” என கூறினார்.
மேலும் இதற்க்கான விழிப்புணர்வு பிரச்சாரத்தை பல இந்து அமைப்புகள் தொடங்க உள்ளன. ஏற்கனவே கோவில் வளாகங்களில் ஹிந்து அல்லாதோர் வியாபாரம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டிருக்கும் நிலையில் ஹலாலுக்கு எதிரான போராட்டம் கர்நாடகத்தில் பரபரப்பை உண்டுபண்ணியுள்ளது.
…..உங்கள் பீமா
