29-3-22/9.00am
மேற்குவங்கம் : பிர்பம் படுகொலைகள் வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளை கைது செய்யாமல் திரிணமூல் பிரமுகர் கொல்லப்பட்ட வழக்கில் மட்டும் குற்றவாளிகளை கைதுசெய்திருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்திவருகின்றன.
மேலும் அரசியல் எதிரிகளை கூலிப்படையை ஏவிவிட்டு கொல்லும் கலாச்சாரம் மேற்குவங்கத்தில் அதிகரித்திருப்பதாகவும் விமர்சிக்கின்றனர். இந்நிலையில் நேற்று மேற்குவங்க சட்டசபை கூடியது. சட்டசபையில் நடந்த விவாதத்தில் பிர்பம் படுகொலை பற்றி விவாதிக்க பிரதான எதிர்க்கட்சியான பிஜேபி கோரியது.

இதற்க்கு பதிலளிக்காத மமதா மற்ற விவகாரங்களை பேச ஆரம்பித்தார். பிஜேபி எம்.எல்.ஏக்கள் தொடர்ந்து கேள்வியெழுப்பவே திரிணாமூல் எம்.எல்.ஏக்கள் அவர்களை சூழ்ந்தனர். இருதரப்பினரும் வாக்குவாதத்தில் ஈடுபடவே திரிணாமூல் உறுப்பினர்கள் அவர்களை தாக்க ஆரம்பித்தனர். பதிலுக்கு சுவேந்து அதிகாரி மற்றும் உடனிருந்த எம்உறுப்பினர்கள் பதிலுக்கு தாக்க ஆரம்பித்ததாக தெரிகிறது. இதில் சிலர் காயமடைந்தனர்.

பிஜேபி உறுப்பினர்களை பலமாக தாக்கிய திரிணாமூல் அசிட் மசும்தார் மூக்குடைக்கப்பட்டார். பிஜேபி உறுப்பினர்களுக்கும் காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த கலவரத்தில் காவல்துறையினர் மப்டியில் வந்து பிஜேபியினரை தாக்கியதாக சொல்லப்படுகிறது. மேலும் பிஜேபி எம்.எல்.ஏக்கள் ஐந்து பேர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மறு உத்தரவு வரும்வரை இந்த நீக்கம் தொடரும் என சபாநாயகர் பிமன் பானெர்ஜி அறிவித்துள்ளார்.
அமித் மாளவியா தனது ட்விட்டரில் பிஜேபி உறுப்பினர்களை திரிணமூல் உறுப்பினர்கள் தாக்குவதை வீடியோவாக வெளியிட்டுள்ளார்.
மேலும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள உறுப்பினர்கள் மேற்குவங்க ஆளுநரை சந்தித்து புகாரளித்துள்ளனர். இதனிடையே சுவேந்து அதிகாரி கூறுகையில் ” சட்டம் ஒழுங்கு பற்றி விவாதிக்க கோரினால் தாக்குகிறார்கள்.
இடைநீக்கத்தை ரத்துசெய்யவில்லையெனில் நாங்கள் நீதிமன்றத்தை நாட உள்ளோம்” என குறிப்பிட்டார்.
….உங்கள் பீமா
